ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு கேரளா போன நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி அப்படியே கோவா போய் ஒரு டிரிப் அடித்து விட்டு மீண்டும் தனி விமானத்தில் கோவாவில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார்கள்.
இப்போது இணையம் முழுக்க நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கை பிடித்து விமானத்தில் இருந்து இறங்கி வரும் படங்கள் தான் பரவி வைரலாகி வருகிறது.
...
கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது .
இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார் . அந்த தொகையை தாணு, தலைமையில் கே ஆர் , K. முரளிதரன் , KJR ராஜேஷ் ஆகியோர் அடங்கிய குழு நீதிபதி அவர்களிடம் ஒப்படைத்தது . தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி தெரிவி...
நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன் - நடிகர் சூர்யா
நீட் தேர்வு அச்சத்தால் சமீபத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, ' உயிருக்கு பயந்து வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடுகிறது' என விமர்சித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, நீதிமன்றங்களை தவறாக விமர்சித்ததாக நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 13-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் அனுப்பி இருந்தார். நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதம் கடந்த 14 -ம் தேதி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்து கேட்புக்காக அனுப்பப்பட்டது.
இதனை ஆய்வு செய்த தலைமை வழக்க...
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.
வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருடைய மகன் எஸ்பிபி சரண் அவ்வப்போது தந்தையின் உடல்நிலை குறித்த வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதன்படி, இன்று (செப்டம்பர் 19) எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
எனது அப்பா எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைந்து குணமடைகிறார்.
அவர் நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார்.
மருத்துவர்கள் உதவியுடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் எழுந்து உட்காருகிறார்.
அவருக்கு தொடர்ந்து மருத்துவக்குழு தீவிர சிச...
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துக்கள் என அவர் பதிவு செய்துள்ளார்.
கடுப்பான அஜித், கனல் தெறிக்கும் எச்சரிக்கை
தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை.
"தனது பெயரை பயன்படுத்தி தொழில் சம்பந்தமாக அணுகினால் ஏமாற வேண்டாம்":
ஒரு சில தனிநபர்கள் தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.
"வர்த்தக ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல"- அஜித் தரப்பு.
அஜித்திடம் வேலை பார்த்தவர்கள் அவரது பெயரை தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து அறிக்கை வெளியீடு.
நடிகர் அஜித்குமாரின் மேலாளராக சுரேஷ் சந்திரா என்பவர் தான் இருக்கிறார்.
சுரேஷ் சந்திராவை தவிர்த்து வேறு யாருடனும் தொடர்பு கொள்ள வேண்டாம்.
நடிகர் அஜித்குமாரின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்.எஸ்.பரத் அறிக்கை....
நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் ‘‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டிய அரசாங்கம், ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.
கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாத பொருளாக மாறுகிறது. இறந்தபோன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள் அனல் பறக்க விவாதிப்பார்கள்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபத...