செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

வழக்கு போட்டவரிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட வலிமை இயக்குனர் திட்டம்!

வழக்கு போட்டவரிடம் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட வலிமை இயக்குனர் திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜித்தின் ‘வலிமை’ படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அப்படத்திற்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனிடம், இயக்குநர் ஹெச் வினோத், 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்குது. ‘நேர்கொண்டப் பார்வை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக 'வலிமை' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திர்த்தில் நடித்திருந்தனர். போனி கபூர் தயாரித்த இந்தப் படம், நீண்ட நாள் காத்திருப்புக்குப பின், கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘வலிமை’ படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றாலும், விமர்சனரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில், படத்தை பார்த்த சிலர், 'மெட்ரோ' படத்தின் ...
நடிகர் சங்க புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களாக கமல், பூச்சிமுருகன், கோவைசரளா உட்பட 9பேர் தேர்வு

நடிகர் சங்க புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களாக கமல், பூச்சிமுருகன், கோவைசரளா உட்பட 9பேர் தேர்வு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முதல் கூட்டம் இனிதே நடைபெற்றது ! பல போராட்டங்களுக்கு பிறகு சுமார் 2 வருடங்கள் கழித்து தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு விஷால் தலைமையிலான நடிகர் சங்க அணி வெற்றி பெற்ற நிலையில், வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட முதல் கூட்டம் நேற்று இனிதே நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி தந்த ஓய்வு பெற்ற நீதியரசர் திரு E.பத்மனாபன் அவர்களுக்கும், இவ்வழக்கில், சிரயான முறையிலும்.. நியாயமான முறையிலும் தீர்பளித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சங்க சட்ட ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் திரு.கிருஷ்ணா திரு.ரவீந்திரன், மூ...
மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் ,நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை யுஎஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். எம்.சுகுமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர் .அதன்படி மாமனிதன் திரைப்படம் வருகிற மே மாதம் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். https://twitter.com/seenuramasamy/status/1506452139647721481?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1506452139647721481%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcinema.maalaimalar.com%2Fcinema%2Fcinemanews%2F2022%2F03%2F23110958%2F3604879%2FTamil-cine...
அரசியல் கட்சியால் சினிமாவுக்கு பிரச்னை வந்தால்… நடிகர் கார்த்தி அதிரடி பதில்!

அரசியல் கட்சியால் சினிமாவுக்கு பிரச்னை வந்தால்… நடிகர் கார்த்தி அதிரடி பதில்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சங்க தலைவராக நடிகர் நாசர், துணைத் தலைவராக பூச்சி முருகன், பொதுச்செயலாளராக விஷால் பொருளாளராக கார்த்திக் உள்ளிட்ட வெற்றிபெற்ற 29 உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சி முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், ‘நடிகர் சங்கத் தேர்தல் வரலாற்றில் 3 ஆண்டுகள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் சங்கத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி பத்மநாபன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். எங்கள் பக்கம் நியாயம், நேர்மை உள்ளது. பொறுமையாக காத்திருந்து வெற்றியை பெற்றதில் பெருமையடைகிறோம். நடிகர் சங்க புதி...
நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்யணுமாம் காரணம் கேட்டா சிரிச்சிடுவீங்க!

நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்யணுமாம் காரணம் கேட்டா சிரிச்சிடுவீங்க!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான கண்ணன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், ரவுடிகளை ஒடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது பொதுமக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதாக புகாரில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62ஆவது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழு இணைந்து பட்டாசு வெடித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகை...
நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 10 ஆயிரம் நிதி!

நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 10 ஆயிரம் நிதி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  தென்னிந்திய நடிகர் சங்க கட்டுமான பணிகளுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் (TMJA) சார்பில் ரூ.10,000-க்கான காசோலையை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தியிடம் சங்க தலைவி கவிதா, செயலாளர் கோடங்கி உட்பட நிர்வாகிகள் வழங்கினர். முன்னதாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்காக தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கேக் கொண்டுவரப்பட்டு, அதை புதிய தலைவர் நாசர் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.    ...
20 கோடி தேவை கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்… 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் – நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு

20 கோடி தேவை கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்… 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் – நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், நடிகர்கள், வீடியோ
    20 கோடி தேவை  கவுரவ பிச்சை எடுக்கவும் தயார்... 3 ஆண்டுகள் முழுமையாக செயல்படுவோம் - நடிகர் சங்க முதல் செயற்குழு கூட்டத்தில் பேச்சு   https://youtu.be/9yCFTNnCmIE
ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட  “தூஃபான்” பாடல்!

ட்ரெண்டிங்கில் இருக்கும் ‘கே ஜி எஃப் 2’ பட “தூஃபான்” பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
      *இணையத்தில் வைரலாகும் 'தூஃபான்': ட்ரெண்டிங்கில் இருக்கும் 'கே ஜி எஃப் 2' பட பாடல்* முன்னணி நடிகர் யஷ் நடிக்கும் 'கே ஜி எஃப் ' படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்ற 'தூஃபான்..' பாடல் வெளியாகி இணையத்தில் சாதனை படைத்து வருகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’ திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. https://youtu.be/8JumUZyzXP8 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்க...
6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

6.75 லட்சத்துக்கு ஏலம் போன ஏ.ஆர்.ரஹ்மான் ஆடை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய ஆடை ஒன்று, 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டுச் சென்றவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தனது துள்ளல் இசையால் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தவர். அமைதியான சுபாவம் கொண்ட ரஹ்மான், தனது இசையால் மற்றவர்களை பேச வைத்தவர். 1992-ம் ஆண்டு ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்தார். சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை, அதுவும் 2 விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலை நிமிரச் செய்தார். இந்நிலையில் ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளையின் 28-ம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தம...