செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் மறுமணத்திற்கு போட்ட கண்டிஷன்கள்?

மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் மறுமணத்திற்கு போட்ட கண்டிஷன்கள்?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
  மனைவியை பிரிந்த இசையமைப்பாளர் டி.இமான் மறுமணத்திற்கு போட்டிருக்கும் கண்டிஷன்கள் தான் தற்போதைய ஹாட். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் டி.இமான். இவரது இசையில் சூர்யா நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அண்ணாத்த படத்தில் சிறப்பாக பணியாற்றியதன் பொருட்டு ரஜினிகாந்திடம் சிறப்பு பரிசையும் பெற்றார். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரையில் மோனிகா ரிச்சர்டு என்பவருடன் கடந்த 2008-ம் ஆண்டு இமானுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே தனது மனைவியை விட்டு பிரிவதாக கடந்த டிசம்பர் இறுதியில் அறிவித்தார் இமான். இந்நிலையில் தற்போது தனது மறுமணம் குறித்து பேசியுள்ள இமான், மறுமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து...
இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கூகுள் குட்டப்பா விழாவில் பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கூகுள் குட்டப்பா விழாவில் பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கூகுள் குட்டப்பா விழாவில் பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு* ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி ,ஆர் வி உதயகுமார், பேரரசு, கௌரவ் ...
வைரலாகும் டாப்சி படத்தின் போஸ்டர்!

வைரலாகும் டாப்சி படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்சி, தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். டாப்சிக்கு இந்தியில் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அமைகின்றன. இவர் கைவசம் இந்தியில் பல படங்கள் உள்ளன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மித்தாலி ராஜின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை 'சபாஷ் மித்து' என்ற பெயரில் இயக்குனர் ஸ்ரீஜித் முக்கர்ஜி இயக்கி வருகிறார். இதில் மித்தாலி ராஜாக டாப்சி பன்னு நடித்து வரும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய்  நடிக்கவுள்ளார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்நிலையில...
சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், சென்னையில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெய் பீம் சர்ச்சைக்கு சூர்யா மன்னிப்பு கேட்காததை தொடர்ந்து ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட பாமக மாநில சங்க செயலாளர் ஜெயவர்மன் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக, சென்னை ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு ஏற்கனவே 5 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக பாதுகாப்பு வழங்க சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளது....
சிம்பு வழக்கில் தாமதம்.. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்!

சிம்பு வழக்கில் தாமதம்.. தயாரிப்பாளர் சங்கத்துக்கு அபராதம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கேட்டு நடிகர் சிம்பு தாக்கல் செய்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ம் ஆண்டு வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருத்திருந்தார். அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இணையதளங்களில் ...
மீண்டும் சூர்யா – சுதா கொங்கரா கூட்டணி!

மீண்டும் சூர்யா – சுதா கொங்கரா கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளிவரவிருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கிருக்கும் இப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதன் பின் பாலா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் சுதா கொங்கராவுடன் சூர்யா இணையவுள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகவிருக்கும் 'செல்ஃபீ' படத்தில் கெளதம் மேனன் மற்றும் ஜி.வி பிரகாஷ் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் குறித்து சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் சூர்யா-சுதா கொங்கரா இருவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜி.வி பிரகாஷ், "கண்டிப்பாக இருவரும் இணைகிறார்கள், இந்தாண்டின் இறுதியில் இப்படத்திற்கான அறிவிப்ப...
போரை நிறுத்துங்கள் புதின்- வைரமுத்து டுவிட்!

போரை நிறுத்துங்கள் புதின்- வைரமுத்து டுவிட்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ‘போரை நிறுத்துங்கள் புதின்’ என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து டுவிட் செய்துள்ளார். டுவிட்டரில் வைரமுத்து கூறியுள்ளதாவது:- மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகை வான் விழுங்கும் பகலை இருள் குடிக்கும் கடல்கள் தீப்பிடிக்கும் குண்டு விழாத நாடுகளிலும் ஏழைகளின் மண்பானை உடையும் ஆயுதம் மனிதனின் நாகரிகம்; போர் அநாகரிகம் போரை நிறுத்துங்கள் புதின் என கூறியுள்ளார்....
ஹாலிவுட் படத்தில் ஆலியா பட்!

ஹாலிவுட் படத்தில் ஆலியா பட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, கல்லி பாய் போன்ற பல பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை ஆலியா பட். இவர் தற்போது கங்குபாய் கத்யாவாடி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 'கங்குபாய் கத்யாவாடி' படம் ரிலீஸாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியில் வாழ்ந்த கங்குபாய் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் 25-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அலியா பட் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வொண்டர் வுமன் படத்தின் நாயகி கல் கடோட் மற்றும்ஜேமி டோர்னன் ஆகியோருடன் இணைந்து அலியா பட் நடிக்கவுள்ளார். நெட்பிளிக்ஸ் ஒரிஜினலாக உருவாகும் இப்படத்தை...
நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்!

நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும், சாம் பாம்பே என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார். பூனம் பாண்டே கூறும்போது, “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்....