REVIEWS
விண்வெளி பயண குறிப்புகள் – விமர்சனம்
ஸ்டெய்லா கூலிங்கிளாஸ் போட்டு கோட் போட்டு இடுப்புல லுங்கி கட்டி ஒருத்தர் வந்தா எப்படி இருக்கும்... அப்படி இருக்கு "விண்வெளி பயண குறிப்புகள்" படம்.
டைட்டில் மார்டனா வைச்சிட்டு கதை முழுக்க கிராமத்து வாசனையில் இயக்குனர் அசத்தி இருக்கார்.
அப்படி என்ன கதை...
ஊரில் பெரிய தாதா ஆத்விக் ஜலந்தர் ஊரையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். பெண் அமைச்சர் ஒருவரின் ஆசியோட ஊரையே அடக்கி வைச்சிருக்கார். அவரை எதிர்க்க அந்த ஊரில் யாருக்கும் தைரியம் இல்லை.
ஜலந்தருக்கு சிறு வயதில் இருந்தே விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை. இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து வரும் ஒருவர் விண்வெளி பற்றி பேச, அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜலந்தர். விண்வெளிக்குச் செல்ல பல கோடிகள் வரை செலவாகும் என்றும், அந்த பணத்தை கொடுத்தால் விண்வெளிக்கு போக தான் உதவி செய்வதாக அந்த நபர் கூறுகிறார்.
இதுக்...
ரசனையான கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்
பாளம்பாளமா பூமி வெடிச்சி காஞ்சிப்போயிருந்த பூமிமேல ஒரு லாரி தண்ணிய ஊத்தினா எப்படி இருக்கும்...
ஊத்துன தண்ணிய பூமி உறுஞ்சும் பாருங்க... ஒரு வேகம்... அப்படி இருக்கு கார்த்தியோட கடைக்குட்டி சிங்கம் படம்.
ஹீரோயின் சதை மேல நம்பிக்கை வைக்காம குடும்ப செண்ட்டிமெண்ட் கதை மேல நம்பிக்கை வைச்சி ரத்தம் காட்டாம... வில்லனோட சத்தம் இல்லாம ஜாலியா படம் தொடங்கி முடியிறவரை வேல்ராஜின் கேமரா கண்ணுக்கு குளிர்ச்சியா பச்சை பசேல்னு வயல்... டிராக்டர்... கலகல கூட்டுக்குடும்பம் அதுல வர்ற மாமன் மச்சான் சண்டை என காட்டி ரொம்பவே ரசிக்க வைச்சிருக்கார் இயக்குனர் பாண்டியராஜ்.
என்னதான் பணம் காசு படிப்பு இருந்தாலும் விவசாயம் தான் தலைமுறையை காப்பாற்றும். விவசாயம் அழிந்தால் நாடே அழிந்து விடும். விவசாயம் வளர்ந்தால் நாடு சீக்கிரமே வல்லரசாக மாறிவிடும் என்கிற நெத்தியடி விஷயத்தை சரியான நேரத்தில் சொல்லியிருக்கிற...
செயல் விமர்சனம்
செயல் விமர்சனம்
நீதி நேர்மை நியாயம் பேசும் அம்மாவுக்கு தப்பாமல் பிறந்திருக்கிற மகன்தான் கதைநாயகன். மார்க்கெட்டில் கண்ணுக்கு நேராய் நடக்கிற அநியாயத்தை அவன் யார் என்றே தெரிந்து கொள்ளாமல் தட்டிக்கேட்கிறான் ஹீரோ. அடிவாங்கியவன் மார்க்கெட்டில் பெரிய ரவுடியாக வலம் வருபவன்.
அடிவாங்கிய ரவுடிக்கு தான் அடிவாங்கிய அதே இடத்தில் ஹீரோவை அடித்தால்தான் மீண்டும் அந்த மார்க்கெட் கிடைக்கும் என்பதால் ஹீரோவை அடிக்க திட்டமிடுகிறான்.
கடைசியில் ஹீரோவை ரவுடி அடித்தானா இல்லையா என்பதுதான் ‘செயல்’ படத்தின் கதை.
ஏதோ சாதாரண ஒரு சம்பவம் போல இருந்தாலும் ஒரு புதுமுகம் ராஜன் தேஜேஸ்வருக்கு இயக்குனர் ரவி ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்.
இன்றைக்கு ஹீரோக்களாக இருக்கிற விஜய், சூர்யா போன்றவர்களின் முதல்படத்தில் இருந்த வேகத்தை தன் முதல் படத்திலும் காட்டுகிறார் புதுமுகம் ராஜன்.
நடிப்பு, ஆக்ஷன், நக்கல் என கலந்து கட...
வலிமிகுந்த நிஜம் யாழ்.. – விமர்சனம்
டேனியல் பாலாஜி, வினோத், சசி, நீலிமா,லீமா,மிஷா ரக்சனாவும் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாழ்'. இதில் ஈழத்துக் கலைஞர்களும் நடித்துள்ளனர். ஆதி கருப்பையா, நஸீர் ஒளிப்பதிவில், அருணகிரி இசையில் உருவான இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி தயாரித்து எம்.ஸ் ஆனந்த் இயக்கியுள்ளார்.
'யாழ்' திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி. இத் திரைப்படத்தின் கதை ஆரம்பம் முதல் இறுதிவரை இலங்கையில் நடக்கிறது.இதில் இந்திய தமிழ் கதாபாத்திரம் எதுவும் கிடையாது. அனைத்து கதாபாத்திரங்களும் ஈழத் தமிழர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்கள் ஈழத்தமிழில் இருப்பதும்.பாடலாசிரியர்களும் இலங்கைத்தமிழர்களே என்பதும் இதுவே முதல் முறை. வசனம் முழுவதும் இலங்கைத் தமிழ்.
'யாழ்' என்பது ஈழத் தமிழர்களால் உருவாக்கப்படட ஒரு இசைக் கருவியாகும்.பாணர்கள் என்பவர்கள் இக் கருவியை வைத்துக்கொண்டு சைவ ...
இது கொப்புறான் சத்தியமா பாலா படமில்லீங்கோ…-கோடங்கி விமர்சனம்
இது கொப்புறான் சத்தியமா பாலா படமில்லீங்கோ... நல்ல படம் நாச்சியார்
கோடங்கி விமர்சனம்
விடலை கற்பழிப்பு வழக்குகளில் வில்லங்கம் விவகாரம்... பணபலம்... அதிகார திமிர் எல்லாம் நிறைந்திருக்கும் குப்பை மேடில் வசிக்கிறவன் கோயிலில் உள்ள கருவறை சாமியை போலவும், கோயில் என்று சொல்லிக் கொண்டு வசிக்கும் கோபுரவாசியின் நடத்தை குப்பை மேட்டைவிடவும் கேவலமானது நெற்றிப்பொட்டில் பளீச்சென அடித்து தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குனர் பாலா.
வழக்கமாக இயக்குனர் பாலா படங்கள் என்றாலே குரூரம், கோமாளித்தனம், சைக்கோத்தனம் அபத்தம் என அனைத்தும் நிறைந்திருக்கும்... தான் என்கிற ஆணவம் பல இடங்களில் எட்டிப்பார்க்கும்... ஆனால், நாச்சியார் அப்படியில்லை... ‘நரம்பை’ கட் பண்ணியதால்தான் இது பாலா படம் என்றே நம்மால் நம்ப முடிகிறது.
சைக்கோத்தனம் எங்கும் இல்லை... குரூரம் கொஞ்சமும் இல்லை... கதைக்கும் காட்சிக்கும் எந்த அளவு அழுத்தம் வேண...





