வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30
Shadow

விமர்சனம்

இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் “ஸ்பைடர்” –  விமர்சனம் கோடங்கி

இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் “ஸ்பைடர்” – விமர்சனம் கோடங்கி

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
இயக்குனரின் ஆழ்மன அழுக்கை வெளிப்படுத்தும் "ஸ்பைடர்" - விமர்சனம் கோடங்கி   மித மிஞ்சிய பணம், தகுதிக்கு மீறிய செல்வாக்கு, தான் என்ற ஆணவம் இவை எல்லாம் எப்போது ஒரு நல்ல படைப்பாளிக்குள் நுழைகிறதோ அப்போது அவன் கற்பனைகள் பயன்படாமல் ... திறமைகள் பயன்படுத்தப் படாமல் பாழடைந்து கிடக்கும் இடங்களில் கிழிந்து தொங்கும் சிலந்தி வலை போல ஆகிவிடும். அப்படி ஒரு நிலையில்தான் இருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் "ஸ்பைடர்".. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இதுவரை இப்படி ஒரு கேவலமான படத்தை கொடுத்தது இல்லை. எந்த ஒரு படைப்பும் இயக்குனரின் திறமையை காட்டும் கண்ணாடி என்பார்கள். ஸ்பைடர் கண்ணாடி காட்டும் திறமை ஆழ் மன அழுக்கும், ஆணவமும், எதை எடுத்தாலும் ரசிக்க ஒரு கூட்டம், கை தட்ட ஒரு கூட்டம், பணத்தை கோடிகளில் கொட்ட ஒரு கூட்டம் என்ற மமதையை வெளிப்படுத்துகிறது. ஸ்பைடர் படு தோல்விக்கும், மோசமான விமர்சனம் வாங்க...
ஹர ஹர மகாதேவகி விமர்சனம்

ஹர ஹர மகாதேவகி விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  மரணத்திற்கு பின் இறுதி காரியங்களுக்கு தேவை படும் வண்டி, பூ அலங்காரம், மேளதாள ஆட்களை அனுப்பும் தொழில் செய்கிறவர் கதாநாயகன். பொறியியல் படித்தாலும் இந்த தொழிலை விரும்பி செய்கிறார். கோயில் குளத்தில் நீராடிவிட்டு துண்டுடன் கரையேறும் கதாநாயகனை அதே குளத்தில் தோஷ நிவர்த்திக்கு மூழ்கி எழும் கதாநாயகி நிக்கி கல்ராணி பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து "கடவுளே... கடவுளே... கடவுளே" என கத்துகிறார். அதன் பிறகும் ஒரு முறை பாத்ரூமிலும், இன்னொரு முறை தெருவிலும் ஏடாகூடமாக பார்க்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதுவே காதலாகவும் மாறி கடைசியாக காதலும் பிரேக் அப் ஆகிவிடுகிறது. காதலித்த போது ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொடுத்த பரிசு பொருட்களை ஒரு ரிசார்ட்டில் திருப்பி கொடுக்க முடிவு செய்கிறார்கள். இந்த பொருட்களை அரசியல் கட்சி கொடுத்த பையில் வைத்து எடுத்து செல்கிறார் ஹீரோ.   தேர்தலில் அனுதாப...
வித்தியாசமான முயற்சி  ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  வித்தியாசமான முயற்சி ‘ஆறாம் வேற்றுமை’ - கோடங்கி   ‘ஆறாம் வேற்றுமை’ கதை தொடங்குவதற்கு முன்பு மலை கிராமங்களின் விவரங்கள், அதன் மக்கள்... அதில் இருந்து விலகி நிற்கும் மர்மம் நிறைந்த ‘கூனிக்காடு’ மலை கிராமம்... என பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியபடியே தொடங்குகிறது படம்..!   கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு மலை கிராமத்தில் திடீர் திடீரென ஆட்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொலைகளை யார் செய்வது என்பது தெரியாமல் கிராமத்து ஆட்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகள் தனி குழு வைத்து கொலையாளியை பிடிக்க வருகிறார்கள். கொலைகள் ஏன் நடக்கிறது. கொலையாளியை போலீஸ் பிடித்ததா கூனிக்காடு, கோட்டைக்காடு இரண்டுக்கும் ஏற்பட்ட பகை என்ன, காட்டுவாசி கூட்டம் என்ன ஆனது என்பதை விளக்குகிறது ‘ஆறாம் வேற்றுமை’ படம். கோட...
நெருப்புடா விமர்சனம்

நெருப்புடா விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  நெருப்புடா விமர்சனம் கோடங்கி     வேலை என்று செய்தால் அது `தீயணைப்பு வீரர்’ பணிதான் என்ற லட்சியத்தை கொண்ட இளைஞன்தான் விக்ரம்பிரபு இவரது நண்பர்கள் 4 பேரும் இவரோடு கைகோர்க்கிறார்கள். இந்த ஐவர் குழு சொந்தமாக தீயணைப்பு வாகனம் ஒன்றை வைத்துக் கொண்டு தீ பிடிக்கும் இடங்களுக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியை செய்கிறார்கள். தீயணைப்பு துறையில் சேருவதற்கு முயற்சிக்கிறார்கள். இதற்காக தேர்வு எழுத காத்திருக்கிறார்கள். தேர்வுக்கு முதல் நாள் இரவு ஒரு எதிர்பாராத சம்பவம் இந்த 5 பேரில் ஒருவருக்கு நடக்கிறது. அதன் மூலம் ஏற்படும் திருப்பங்களால் இவர்கள் தேர்வு எழுதினார்களா, இவர்கள் லட்சியம் வெற்றி பெற்றதா... அந்த சம்பவத்தால் ஹீரோவுக்கு என்ன பாதிப்பு என்பதை எல்லாம் சொல்கிறது நெருப்புடா படம்.   சென்னை சிலேட்டர்புரத்தைச் சேர்ந்தவர்கள் விக்ரம்பிரபுவும் அவரின் நான்கு நண்பர்கள...
சதுர அடி 3500 விமர்சனம்..!

சதுர அடி 3500 விமர்சனம்..!

REVIEWS, விமர்சனம்
  வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும் செய்திகள் வெளிவர போலீசும் அந்த கட்டிடத்திற்குள் செல்ல பயப்படுகின்றனர். கட்டிடத்தின் பாக்கி வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியான நாயகன் நிகில் மோகனிடம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் நிகில் மோகன் கொலையில் இருக்கும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பல தடங்கல்கள் வருகின்றன.   அந்த தடங்கல்கள் அனைத்தையும் தாண்டி, கொலைக்கான மர்மத்தை கண்டுபிடித்தாரா? உண்மையாகவ...
உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது ‘ரூபாய்’ விமர்சனம்..!

உழைக்காமல் வரும் பணம் நிலைக்காது ‘ரூபாய்’ விமர்சனம்..!

REVIEWS, விமர்சனம்
    இயக்குனர் தயாரிப்பாளர் பிரபுசாலமோன் நிறுவனத்தின் புதிய படம் ‘ரூபாய்’. பெயரை பார்த்ததும் ஏதோ அரசை குறை சொல்லப்போகும் படம் என்ற நினைப்பில் உள்ளே வருபவர்களுக்கு உண்மையை சொல்லியிருக்கிறது கதை அதற்காகவே இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு சபாஷ் போடலாம். விமர்சனத்திற்கு போவதற்கு முன்பு கதை... குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையே தராமல் இழுத்தடிக்கும் ஒரு கேரக்டர் சின்னி ஜெயந்த். அவர் மகள் ஆனந்தி. வீட்டை காலி செய்ய வாடகை வண்டி தேடுகிறார். தேனியில் இருந்து கோயம்பேடுக்கு பூ ஏற்றி வரும் ஹீரோவின் வண்டியை அழைக்கிறார். அங்கே ஆனந்தியை பார்த்ததும் ஆனந்தி மீது காதல் ஏற்படுகிறது. வீட்டு சாமான்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு போகிறார்கள். அங்கே வீட்டுக்காரர் வீடு தரமறுக்கிறார். வேறு வீடு தேடி அலைகிறார்கள். இதற்கிடையில் வங்கியில் கொள்ளை அடித்த பணத்தை போலீஸ் சோதனைக்கு பயந்து இவர்களின...
எவனவன் – விமர்சனம்

எவனவன் – விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
சொந்தமாக தொழில் செய்து வரும் நாயகன் அகில், நாயகி நயனாவை காதலித்து வருகிறார். இவர்களது காதலுக்கு நயனாவின் அம்மா மற்றும் அப்பா டெல்லி கணேஷ் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஒருநாள் நயனாவின் பெற்றோர் வெளியூர் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் நயனா, அகிலை துணைக்கு அழைக்கிறாள். இவ்வாறு நயனா வீட்டிற்கு செல்லும் அகில், நயனா இருவரும் வேறு வேறு அறைகளில் தங்குகின்றனர். அடுத்த நாள் காலை, நயனா குளிப்பதை தனது மொபைலில் வீடியோ எடுத்து அதனை நயனாவிடம் காண்பிக்கிறார். அந்த வீடியோவை பார்த்து அகில் மீது கோபமடையும் நயனா, அதனை அழிக்க சொல்ல, அகில் வீடியோவை அழித்து விடுகிறார். ஆனால் தனது வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை ரெக்கவரி போட்டு எடுத்து விடுகிறார். இந்நிலையில், அகிலின் போன் தொலைந்து போகிறது. மற்றொரு நாயகனான சரணிடம் சிக்கும் அந்த போனை தரச்சொல்லி அகில், அவரை மிரட்டுகிறார். இதனால் கோபமடையும் சரண், போனில் ஏதேனும...
அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்

அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்

REVIEWS, விமர்சனம்
அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்நிலையில், நாயகனின் நண்பர் பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர், நாயகனுக்கு போன் செய்து தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தான் அவசரமாக அங்கு செல்லவேண்டும் என்பதால், நான் வரும்வரை என்னுடைய வேலையை நீ பார்க்கவேண்டும் என்று நாயகனிடம் கெஞ்சுகிறார். நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்ட...
வனமகன் விமர்சனம்

வனமகன் விமர்சனம்

விமர்சனம்
சாயிஷா சிறுவயதில் இருக்கும்போது அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அதன்பிறகு சாயிஷாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரகாஷ் ராஜ் வசம் வருகிறது. அதன்பின்னர், பிரகாஷ் ராஜ் சாயிஷாவின் பெயரில் நிறைய தொழில்கள் தொடங்கி சாயிஷாவை பெரிய தொழிலபதிர் ஆக்குகிறார். சாயிஷா பெயரிலேயே எல்லா சொத்துக்களும் இருப்பதால், தன்னுடைய மகனான வருணுக்கு அவளை திருமணம் செய்துவைத்து சொத்துக்களை தன்வசமாக்க நினைக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்நிலையில், அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் போது, காட்டுவாசியான ஜெயம் ரவியின் மீது கார் ஏற்றிவிடுகிறார்கள். அடிபட்டு கிடக்கும் ஜெயம் ரவிக்கும் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு தூக்கி செல்கிறார்கள். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் இந்தியா கொண்டு வந்துவிடுகிறார்கள். அவருக்கு சிகிச்சை அளித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால், அவர் பழைய நினைவுகளை இழந்துவிடுகிறார். கா...

தங்கரதம் – விமர்சனம்

விமர்சனம்
நடிகர்கள் : வெற்றி,அதிதி கிருஷ்ணா, சவுந்தர்ராஜன் , 'ஆடுகளம்' நரேன், 'மொட்டை'ராஜேந்திரன் , சுவாமிநாதன் , சாண்டில்யா மற்றும் பலர்.  இயக்கம் : பாலமுருகன். காய்கறி லோடுவேன் டிரைவர்களின் வாழ்க்கை முறையும் அவர்களது காதலும் , கோபமும் , தாபமும் தான் "தங்க ரதம் " படக்கரு. கதை : தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட்டான ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து, போட்டி போட்டுக் கொண்டு காய்கறி லோடு அடிக்கும் ஒரே ஊரைச் சேர்ந்த டெம்போ வேன் டிரைவர்கள் செல்வாவும் , பரமனும் .இதில் பரமனின் டெம்போ அவருக்கு சொந்தமானது .செல்வாவின் டெம்போ வேனுக்கு அவரது ஒன்று விட்ட சித்தப்பா உரிமையாளர். தொழில் போட்டியால் பகையாளியாக திரியும் பரமனின் தங்கையை செல்வா ., பரமனின் தங்கை அவர்., என்பது தெரிவதற்கு முன்பிருந்தே உயிருக்கு உயிராக காதலிக்கிறார். அந்த காதல் பூத்து காய்த்து , கசிந்துருகி ,கனிந்தத...