வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

உலகம்

மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்த சீனா!

மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்த சீனா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்துள்ளது. சீனாவில், கடந்த 1979 ஆம் ஆண்டு முதல், தம்பதிகள், ஒரு குழந்தையை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கொள்கை நடைமுறையானது. இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் அந்தக் கொள்கையில் திருத்தம் கொண்டுவந்த சீன அரசாங்கம், தம்பதிகள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளித்தது. எவ்வாறிருப்பினும், சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளில், பிறப்பு வீதம் செங்குததான சரிவைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வருடாந்த பிறப்புகள் 2020 ஆம் ஆண்டில், தொடர்ந்து 12 மில்லியனாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த மாதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதித்து சீன அரசாங்கம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
டுவிட்டருக்கு தடை..!

டுவிட்டருக்கு தடை..!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நாட்டு ஜனாதிபதி மொஹமட் புஹாரி அண்மையில் டுவிட்டரில் பதிவிட்ட கருத்து நீக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொஹமட் புஹாரிக்கு எதிராக நைஜீரியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இந்நிலையில் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டுவது போன்று அவர் பதிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்களது விதிகளை மீறும் வகையில் அவர் கருத்து வெளியிட்டதாக அறிவித்த டுவிட்டர் அவரது பதிவையும் நீக்கியது. இந்நிலையில் காலவரையன்றி அந்நாட்டில் டுவிட்டர் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது...
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்!

மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம் ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 புதிய சூப்பர்சோனிக் பயணிகள் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ், 2029ம் ஆண்டு விமானம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் அட்லாண்டிக் வழித்தடத்தில் பயணித்தால் பயண நேரம் பாதியாக குறையும். உதாரணமாக, லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு 3.5 மணி நேரத்தில் செல்ல முடியும். யுனைடெட் நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் விமான சேவையில் 1976ம் ஆண்டு நுழைந்த கா...
கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி!

கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  கம்போடியாவில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ராட்சத எலி கம்போடியாவில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க 7 வயதான ஆப்பிரிக்க எலி பயிற்சி பெற்று இருந்தது. இதன் மூலம் 2 லட்சத்து 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் வெடிகுண்டுகளை நுகர்ந்து கண்டுபிடிக்கும் திறன்கொண்டது. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த எலியானது, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப்போல, உருவத்தில் சிறியதாக இருந்தாலும், இதுவரை 71 கண்ணி வெடிகளைக் கண்டு பிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. இதனால், மகவாவிற்கு கடந்த வருடம் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஏராளமான கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து பலரின் உயிரைக் காப்பாற்றி, கம்போடியாவின் நாயகனாக வலம் வந்த ஆப்பிரிக்க ராட்சத எலி "மகவா" தன் பணியிலிருந்து ஓய்வுபெற்றது....
பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ பெண் தேர்வு!

பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ பெண் தேர்வு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பிரபஞ்ச அழகியாக மெக்சிகோ பெண் தேர்வு! 69-வது பிரபஞ்ச அழகிப் போட்டி புளோரிடாவில் ஹாலிவுட் அரங்கில் உள்ள ராக் ஹோட்டல் அண்ட் கேஸினோவில் நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மிகுந்த பாதுகாப்புடன் அழகிப் போட்டி நடத்தப்பட்டது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் மெக்சிகோ நாட்டின் 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், பிரேசிலின் ஜூலியா காமாவும் (28) இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியான தென் ஆப்பிரிக்காவின் ஜோஜிபினி டுன்ஸி, இந்த ஆண்டின் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவரின் பெயரை அறிவித்தார். தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன் ஆண்ட்ரியா மெஸா மகிழ்ச்சியில் உற்சாகக் குரலிட்டார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. பின்னர் மெஸாவுக்கு மிஸ் யு...
இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்!

இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இஸ்ரேலுக்கு எதிராக அணி திரளும் இஸ்லாமிய நாடுகள்! கிழக்கு ஜெருசலேமில், அல்-அக்ஸா மசூதியில், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய காவல் துறை மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை  வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome மூலம் இவை தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா (Gaza) பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான மோதல்கள் தொடர்ந்து இரு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) அனை...
காசாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

காசாவில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்

HOME SLIDER, உலக செய்திகள், உலகம், செய்திகள்
காசாவில் உள்ள சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தி தகர்த்தது இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதலுடன், விமானப்படை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளையும் வீசி வருகிறது. இந்த நிலையில், காசாவில் உள்ள சர்வதேச ஊடகங்கள் இயங்கும் பிரபல அடுக்குமாடி கட்டிடத்தை இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி தகர்த்தது. அல் ஜசிரா, அசோசியேடட் பிரஸ் போன்ற சர்தேச ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் உட்பட பல முக்கிய நிறுவனங்கள்  அல்- ஜலாலா  கட்...
‘இந்தியா உறுதியாக இருங்கள்’ ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடத்தில் மூவர்ண மின்விளக்கு பிரதிபலிப்பு

‘இந்தியா உறுதியாக இருங்கள்’ ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடத்தில் மூவர்ண மின்விளக்கு பிரதிபலிப்பு

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக  உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வர துணை நிற்பதாக தெரிவித்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கட்டிடத்தில் இந்திய தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த மின்விளக்கு பிரதிபலிப்பில் ‘இந்த பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா உறுதியாக இருங்கள்’ என்று எழுதப்படுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக...
பொதுமக்களின் ஒத்துழைப்பும், தடுப்பூசி திட்டமும்தான் பிரிட்டனில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாம்!

பொதுமக்களின் ஒத்துழைப்பும், தடுப்பூசி திட்டமும்தான் பிரிட்டனில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பொதுமக்களின் ஒத்துழைப்பும், தடுப்பூசி திட்டமும்தான் பிரிட்டனில் கொரோனாவை கட்டுப்படுத்தியுள்ளதாம்! கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்ட இங்கிலாந்தில், கடந்த 14மாதங்களில் முதல்முறையாக தினசரி கொரோனா பாதிப்பில் ஒரு நபர் கூட உயிரிழக்கவில்லை. இதேபோல பிரிட்டனில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாக உள்ளது. எப்படி இது சாத்தியமானது என தெரிந்துகொள்வோம். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இங்கிலாந்து. கடந்த டிசம்பர் மாதம் உருமாறிய கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்த போது, அதனை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுத்தது பிரிட்டன். கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா, 70% வேகமாக வைரஸ் தொற்றை பரப்புகிறது என அறிந்ததும், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தினார். நாட்டின் பொ...
ஓட்டப்பாதையில் நுழைந்து போட்டியாளர்களுக்கு இணையாக ஓடிய நாய்!

ஓட்டப்பாதையில் நுழைந்து போட்டியாளர்களுக்கு இணையாக ஓடிய நாய்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம், வீடியோ
ஓட்டப்பாதையில் நுழைந்து போட்டியாளர்களுக்கு இணையாக ஓடிய நாய்! அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள உட்டா (UTAH) -வில் பள்ளிச் சிறுமிகளுக்கான தொடர் ஓட்டம் நடைபெற்றது. 200 மீட்டர் தொலைவிலான தொடர் ஓட்டம் நடைபெற்றபோது சிறுமிகள் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஓட்டப்பாதையில் நுழைந்த நாய் ஒன்று போட்டியாளர்களுக்கு இணையாக ஓடியது. பின்னர் அனைவரையும் முந்திச் சென்ற நாய், கடைசியாக எல்லைக் கோட்டை முதல் ஆளாக கடந்து போட்டியிலும் வெற்றி பெற்றது. போட்டியை வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களும், நாய் போட்டியாளர்களை முந்திச் செல்வைதக் கண்டு ஆரவாரக் குரல் எழுப்பினர். லோகன் உயர்நிலைப் பள்ளியில் இந்த தொடர் ஓட்டம் நடைபெற்றது. போட்டியில் முன்னணியில் சென்று கொண்டிருந்த கேட் ஹேவுட் (Kate Heywood) எல்லைக் கோட்டை அடைவதற்காக வேகமாக ஓடிக்கொண்டிருந்தார். திடீ...