அமெரிக்கா நிம்மதியாக தூங்க வேண்டுமா எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் – வட கொரியா எச்சரிக்கை
அமெரிக்கா நிம்மதியாக தூங்க வேண்டுமா எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் - வட கொரியா எச்சரிக்கை
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது, ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை...









