சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

உலகம்

இந்திய மதிப்பில் ரூ.161 கோடிக்கு விற்பனை ஆன மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு!

இந்திய மதிப்பில் ரூ.161 கோடிக்கு விற்பனை ஆன மைக்கேல் ஜாக்சனின் பண்ணை வீடு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள், நடிகர்கள்
மைக்கேல் ஜாக்சன் இறந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய நெவர்லேண்ட் பண்ணை வீடு தற்போது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பாப் இசை உலகின் அரசன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மைக்கேல் ஜாக்சனுக்கு அமெரிக்காவில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அதில் கலிபோர்னியாவில் உள்ள நெவர்லேண்ட் பண்ணை வீடும் ஒன்று. சுமார் 2 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்புடைய இந்தப் பண்ணை வீட்டை கடந்த 1987-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் இந்தப் பண்ணை வீட்டில் வைத்து 13 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். மேலும் தன் மீ...
ஆஸ்திரேலியா தேவாலயத்தில் தமிழக வீரர் நடராஜன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.!

ஆஸ்திரேலியா தேவாலயத்தில் தமிழக வீரர் நடராஜன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஆஸ்திரேலியா தேவாலயத்தில் தமிழக வீரர் நடராஜன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.! இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடிய சேலம் - சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் விளையாடி, கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் நடராஜன் ஈர்த்தார். ஐபிஎல் தொடரில் தன்னுடைய அசத்தலான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடராஜனுக்கு ஆஷிரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் முக்கியமான இரண்டு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். பின்னர், டி20 தொடரின் 3 போட்டிகளிலும் விளையாடி 6 விக்கெட்டை வீழ்த்தி T20 தொடரை வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். T20 தொடரை வென்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடரை வென்றதற்கான கோப்பையையும், ஹர்திக் பாண்யா தொடர் நாயகன் விருது வென்றதற்கான கோப்பையையும் நடராஜன்...
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  உலகம் முழுவதும் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் இன்றைய தமது கிறிஸ்துமஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக  வாட்டிகனில் கிறிஸ்துமஸ் விழா எளிமையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புனித பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள்  நடத்தப்பட்டு முகக்கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர். உலக மக்களின் பாவங்கள் நீங்க தன்னுடலை சிலுவையில் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளான இன்று அவர் பிறந்த பெத்லஹேம் நகரில் கிறிஸ்மஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதி உலகம்...
மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ள உலக நாடுகள்!

மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ள உலக நாடுகள்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
  உலக நாடுகளை மீண்டும் புதிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் இங்கிலாந்தை தனிமைப்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது. ஒவ்வொரு நாடுகளிலம் மக்கள் கொரோனாவால் பாதிப்பட்டு பல இன்னல்களை சந்தித்தனர். மக்களை பாதிக்கமால் இருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம், வர்த்தகம் கடும் பாதிப்படைந்தன. கடும் நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பில் தீவிரம் காட்டி வந்ததால் கொரோனா வீரியம் குறைய ஆரம்பித்தது. 2020ஆம் ஆண்டு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மீண்டும் புதிய வகை கொரோனா இங்கிலாந்து நாட்டில் பரவியது. புதிய வகை கொரோனா தொற்று இங்கிலாந்து பரவ தொடங்கியிருப்பது உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொரோனா தொற்று தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்க இங்கிலாந்தை தனிமைப்படுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுத்துள...
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் நியூவார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டு உள்ளது. அப்போது பேசிய அவர், மருந்து கிடைக்கும்பொழுது அதனை எடுத்துக் கொள்ளுங்கள் என நாட்டு மக்களை  வலியுறுத்தியுள்ளார்....
முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்ணுடன் கடற்கரையில் செல்ஃபி எடுத்த ஜனாதிபதிக்கு அபராதம்!

முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்ணுடன் கடற்கரையில் செல்ஃபி எடுத்த ஜனாதிபதிக்கு அபராதம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
முகக்கவசம் அணியாமல் ஒரு பெண்ணுடன் கடற்கரையில் செல்ஃபி எடுத்த சிலி நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவுக்கு வெள்ளிக்கிழமை 3,500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. COVID-19 தொற்றுநோய் பரவும் இந்த வேளையில், ​​சிலி அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவதுகட்டாயம் என விதிகளை விதித்தது, மீறினால் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால் முகக்கவசம் அணியாத மக்களுக்கு அபராதங்களும், சிலருக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி எடுத்த செல்பி டிசம்பர் தொடக்கத்தில் சமூக ஊடகங்களில் விரலாக பரவியது. அதன் பின்னர் அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சிலி கடலோர நகரமான கச்சுகுவா நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள கடற்கரையில் தனியாக நடந்து கொண்டிருந்ததாகவும் அப்போது ஒரு பெண் அவரை அடையாளம் கண்டு அவருடன் புகைப்படம் கேட்டதாகவும் பினெரா கூறினார...
எரிமலையின் வெப்பகுழம்பு வெளியேறியபோது இயற்கையின் அற்புதமான காட்சி!

எரிமலையின் வெப்பகுழம்பு வெளியேறியபோது இயற்கையின் அற்புதமான காட்சி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை சமீபத்தில் வெடித்தது. எரிமலையின் வாயிலிருந்து வெப்பகுழம்பு வெளியேறியபோது, ​​எரிமலையின் மேற்பரப்பிலிருந்து ஒரு மைல் தூரத்திற்கு மேல் சாம்பல் புகைகள் உயர்ந்தன. அப்போது, ​​மேற்பரப்புக்கு மேலே ஒரு மின்னல் புயல் உருவானது. இதன் விளைவாக இயற்கையின் ஒரு அற்புதமான காட்சி புகைப்படமாக பதிவாகியுள்ளது. சகுராஜிமா எரிமலையின் மினமிடேக் பள்ளத்தில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருண்ட அடர்த்தியான புகை 3,000 மீட்டர் உயர்ந்துள்ளது. ராய்ட்டர்ஸ் புகைப்படக் கலைஞர் இந்த நிகழ்வைக் கைப்பற்றுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். சகுராஜிமா எரிமலை வீச்சு உலகின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை தளங்களில் ஒன்றாகும். குறிப்பாக மின்னல் புயலுடன் இணைந்த வெடிப்புகள் இயற்கையின் மிக சக்திவாய்ந்த மோதல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மின்னல் எரிமலை மீது ...
கொரோனா வைரஸ் பரவும் வேகம் ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை

கொரோனா வைரஸ் பரவும் வேகம் ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இங்கிலாந்தில் இதுவரை 20 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பை தடுக்கும்வகையில் அந்நாட்டில் கடந்த வாரம் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதல் வாரத்தில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது. இதனால், இங்கிலாந்தில் கொரோனா விரைவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் கொரோனா பரவல் வேகம் புதிய உச்சத்தை தொட்டது. தினமும் 60 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸ் இவ்வளவு வேகமாக பரவ காரணம் என்ன? என்பது குறித்து இங்கிலாந்து விஞ்ஞானிகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தினரும் ஆராய்ச்சி செய்தனர். ...
ஜோ பைடன் பதவியேற்பு விழா எளிமையாக நடக்கிறது

ஜோ பைடன் பதவியேற்பு விழா எளிமையாக நடக்கிறது

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். இந்தநிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதை ஏற்க முடியாது என்று டிரம்ப் கூறி வந்தார். எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடி ஆனது. தற்போது அமெரிகாவின் புதிய அதிபர் ஜோ பைடன் என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்கும் விழா வருகிற ஜனவரி மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதில் இருவரும் பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்கள். வழக்கமாக அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு விழாவுக்கு 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும். பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இந்த விழா கோலாகலமாக நடைபெறும். இந்த முறை புதிய அதிபர் ஜோபைடனின் பதவி ஏற்பு வ...
லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்களை நீக்கிய போர்ன் ஹப் இணையதளம்!

லட்சக்கணக்கான ஆபாச வீடியோக்களை நீக்கிய போர்ன் ஹப் இணையதளம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
இந்தியாவில் பாலியல் சம்பந்தமான வெப்சைட்களை பார்ப்பதற்கு கடந்த 2018 ல் அரசு தடை விதித்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்தன. எனினும் அவற்றிற்கான தடை இன்று வரை தொடர்கிறது. பாலியல் வீடீயோக்களை அதிகளவில் பார்ப்பவர்கள் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் இருந்தது. பல்வேறு சமூக பாலியல் குற்றங்களை தவிர்க்கும் பொருட்டும், சிறுகுழந்தைகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் நோக்கத்துடனும் அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. ஆபாச வீடியோக்கள் பல கொலைகளுக்கும், தற்கொலைகளுக்கும் மற்றும் பாலியல் குற்றங்களுக்கும் காரணமாக இருக்கின்றது என்பது நமக்கு நன்றாக தெரியும். எனவே அரசு அத்தடையை விதித்தது. உலக அளவில் பாலியல் தளங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்த போர்ன் ஹப் உட்பட 827 வெப்சைட்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன இந்நிலையில் போர்ன் ஹப் அதன் வெப்சைட்டில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான ஆபாச...