வெள்ளிக்கிழமை, ஜூன் 12
Shadow

உலகம்

ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்!

ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்!

HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள், முன்னோட்டம்
ஐ.நா.வில் நிறைவேறிய இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம்! இலங்கை இறுதிக்கட்ட போரின்போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க வைக்கும் தீர்மானம் ஒன்று இன்று ஐ.நா.வில் வாக்கெடுப்புக்கு வந்தது. அப்போது இந்தியா உள்பட 14 நாட்கள் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பை புறக்கணித்தன. வங்காளதேசம், பொலிவியா, சீனா, கியூபா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், வெனிசுலா உள்பட 11 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா, இந்தோனேசியா, நேபாளம், நமிபியா, கேமரூன், பஹ்ரைன் உள்ளிட்ட 14 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பிரேசில், பல்கேரியா, செக் குடியரசு, டென்மார்க், பிஜி, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, நெதர்லாந்து, போலந்து உள்ளிட்ட 22 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது....
பஸ்-ஆட்டோ மோதி விபத்து: மத்தியபிரதேசத்தில் 13 பேர் பலி!

பஸ்-ஆட்டோ மோதி விபத்து: மத்தியபிரதேசத்தில் 13 பேர் பலி!

HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள்
பஸ்-ஆட்டோ மோதி விபத்து: மத்தியபிரதேசத்தில் 13 பேர் பலி! மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள ஜவானி என்ற இடத்தில் அங்கன்வாடி பொது சமையல் கூடம் உள்ளது. இங்கு பணியாற்றிய பெண் ஊழியர்கள் இன்று காலை பணி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்தார்கள். அப்போது எதிரே வந்த பஸ், ஆட்டோ மீது மோதியது. இதில் 12 பெண்கள் மற்றும் ஆட்டோ டிரைவர் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்....
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், முன்னோட்டம்
மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்ததாக தனுஷ் நெகிழ்ச்சி! அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இவ்விருதை பெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். இந்நிலையில், தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியை நடிகர் தனுஷ் அறிக்கை மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அசுரன் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியான செய்தியோடு கண் விழித்தேன். சிறந்த நடிகராக ஒரு தேசிய விருதை வென்றதே கனவு போல் இருந்தது. ஆனால், தற்போது இரண்டாவது முறையாக அவ்விருதை வென்றிருப்பது உண்மையிலேயே ஆசிர்வாதம்தான். நான் இந்த அளவுக்கு வருவேன் என நினைத்துப் பார்த்ததில்லை. நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டி உள்ளது. முதலில் அம்மா, அப்பா, என்னுடைய க...
2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்!

2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்!

HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள், முன்னோட்டம்
2 ஆண்டுகளுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம்! சிந்து நதி நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்துகொள்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலக வங்கியால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 1960-ல் கொண்டுவரப்பட்ட இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மிக நீடித்த ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி தரவுகளை பகிர்ந்துகொள்வதற்காகவும், ஒப்பந்தப்படி நீரை பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காகவும் நிரந்தர சிந்து ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையமானது ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு ஒரு முறையாவது, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மாறி மாறி சந்தித்து பேசவேண்டும். கடைசியாக 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளின் சிந்து நதி ஆணைய உறுப்பினர்கள் லாகூரில் சந்தித்து பேசினர். அதன்பின்னர், புல்வாமா தாக்குதல் காரணமாக 2019ல் கூ...
2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

helth tips, HOME SLIDER, NEWS, Photos, உலக செய்திகள், உலகம், செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்! இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த இரண்டு தடுப்பூசிகளையும் இரண்டு தவணைகள் செலுத்தப்படவேண்டும். இதுவரை 4.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர், இரண்டு தவணை தடுப்பூசிக்கு இடையிலான கால அவகாசத்தை  நீட்டிக்கும்படி மத்திய அரசுக்கு பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன் அடிப்படையில் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 6-8 வாரம் என நீட்டிக்க வேண்டும் என்றும், இரண்டாம் தவணைக்கான அவகாசத்தை நீட்டிக்கும்போது அதிக பலனளிப்பதாகவும் மத்திய அரசு கூற...
ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து தீப்பிழம்பு சீறிப்பாய்ந்தது!

ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து தீப்பிழம்பு சீறிப்பாய்ந்தது!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
  ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் நகரம் ரேக்யூவீக்-ல் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது பெயரில் ஐஸ் கொண்ட நாட்டின் தலைநகருக்கு அருகே தீப்பிழம்பு சீறிப்பாய்கிறது. ஆம். ஐஸ்லாந்துதான் அந்த நாடு. இந்நாட்டின் தலைநகர் பெயர் ரேக்யூவீக். இந்நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எரிமலை வெடித்துள்ளது என்கிறது அந்நாட்டு வானிலை ஆய்வு அலுவலகம். ரேக்யூவீக் தீபகற்பத்தில் உள்ள இந்த ஃபேக்ரதால்ஸ்ஃப்யாட்ல் (Fagradalsfjall) எரிமலை வாயின் பிளவு 500 முதல் 700 மீட்டர் நீளமுள்ளது என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. 800 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்த எரிமலை வெடிக்கிறது. இது தவிர, ஐஸ்லாந்தில் கடந்த மூன்று வாரங்களில் 40 ஆயிரம் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. https://twitter.com/Vedurstofan/status/1373057548148948992?s=20 2010-ம் ஆண்டு இந்நாட்டி...
“டிஎம்சாட் 1”- காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் புதிய செயற்கைக்கோள்!

“டிஎம்சாட் 1”- காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் புதிய செயற்கைக்கோள்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
"டிஎம்சாட் 1"- காற்று மாசுபாட்டை கண்டுபிடிக்க உதவும் புதிய செயற்கைக்கோள்! அமீரகத்தின் காற்று மாசுபாடு தொடர்பாக அளவீடு செய்யும் வகையில் ‘டிஎம்சாட் 1’ என்ற புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டு உள்ளது. முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் துபாய் மாநகராட்சி ஒத்துழைப்புடன் இந்த திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த செயற்கைக்கோள் வருகிற 20-ந் தேதி அமீரக நேரப்படி காலை 10.07 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. 15 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் டொரண்டோ பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அமீரக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் அடிப்படையில் அமீரகத்தில் இருக்கும் காற்று மாசுபாடு குறித்து தெரிந்து கொள்ள முடியும். அமீரகம் உள்ள...
ஊரடங்கு வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- சென்னை மாநகராட்சி

ஊரடங்கு வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- சென்னை மாநகராட்சி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஊரடங்கு வதந்தி பரப்பினால் சென்னை மாநகராட்சி கடும் நடவடிக்கை! சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் எதிர்புறம் அமைந்துள்ள மார்க்கெட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கோ.பிரகாஷ் நேற்று கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது. சென்னையில் 4 லட்சம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டு உள்ளனர். இவர்களில் யாருக்கும் இதுவரை எந்த ஒரு பக்கவிளைவும் இல்லை. 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டால்தான் சென்னை பாதுகாப்பான நகரம் என சொல்லமுடியும். 40 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இன்னும் 3 மாத காலம் ஆகும். சென்னையில் உள்ள 140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மாநகராட்சி மூலமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 60 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட தயாராக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்...
முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் – துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் – துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ்

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் - துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடுள்ள ஜனநாயகத்தின் அடையாளம் என குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது; இன்று ஜனநாயகம் அதிக அளவில் பெரும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருவதை நாம் அறிவோம். தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக உலகெங்கிலும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஒரு சிக்கலான சரிவைக் கண்டுள்ளன. ஜனநாயகத்தின் நிலை அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் பொறுத்து அமைகிறது. முடிவெடுப்பதில் பெண்களை ஒதுக்குவது ஒரு குறைபாடு உள்ள ஜனநாயகத்தின் அடையாளமாக இருக்கிறது. பெண்களின் பங்கேற்பு ஜனநாயகத்தை பலப்படுத்துகிறது. இது எல்லா இடங...
பாஸ்போர்ட் கட்டாயமில்லை…போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் – துபாய் அதிரடி

பாஸ்போர்ட் கட்டாயமில்லை…போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் – துபாய் அதிரடி

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பாஸ்போர்ட் கட்டாயமில்லை...போர்டிங் பாஸ் தேவையில்லை,   முகத்தை காண்பித்து விமான பயணம் செய்யலாம் - துபாய் அதிரடி துபாய் குடியிருப்பு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் விவகாரத்துறையின் பொது இயக்குனகரத்தின் இயக்குனர் முகம்மது அகமது அல் மர்ரி கூறியதாவது:- துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக விமான பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் பயணம் செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஊடகத்துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது துபாய் முனையம் எண் 3 வழியாக பயணம் செய்யும் போது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏற்கனவே இந்த வசதியானது சோதனை முறையில் செய்யப்பட்டிருந்தது. தற்போது நேற்று முதல் இந்த வசதி பயன்பாட்டுக்கு வருகிறது. ...