பறக்கும் தட்டுக்கள் உண்மையில் இருக்கிறதா, அதில் வேற்றுக்கிரகவாசிகள் பயணம் மேற்கொள்கின்றனரா என்ற கேள்வி உலகம் முழுவதும் இருக்கிறது. கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 144 புகார்கள் பறக்கும் தட்டுக்கள் குறித்து பதிவாகியுள்ளதாக ஏற்கனவே அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க புலனாய்வுத்துறை வானில் தோன்றும் பறக்கும் தட்டுக்கள் (யூ.எஃப்.ஓ) தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றை மே 17-ஆம் தேதி மேற்கொள்ளவுள்ளது.
இந்தியானா மாகாணத்தின் பிரதிநிதி ஆண்ட்ரி கார்சன் தலைமையில் இந்த விசாரணை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கார்சன் கூறுகையில், ‘50 ஆண்டுகளுக்கு பிறகு பறக்கும் தட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்று நடைபெறவுள்ளது.
புலனாய்வுத்துறைக்கு கீழ் நடைபெறும் இந்த வழக்கில், பறக்கும் தட்டுக்களால் நமது தேசத்திற்கு ஏற்படவுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து வழக்கு நடைபெறவுள்ளது.
விளக்கம...
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 81 நாட்களாக நடைபெற்று வருகிறது.
உக்ரைனின் முக்கிய நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவிற்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷியா சில வாரங்களுக்கு முன் மரியுபோல் நகரத்தை பிடித்ததாக அறிவித்தது. அதேபோன்று உக்ரைனின் 2வது மிகப்பெரிய நகரமான கார்கீவ் நகரத்தின் மீது ரஷியா தொடர் தாக்குதல்களை நடத்தியது. ஏவுகணை தாக்குதல், டாங்கிகள் மூலம் தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களை கார்கீவ் நகர் மீது நடத்திய நிலையில், தற்போது அந்நகரத்தில் இருந்து தனது துருப்புகளை பின்வாங்குவதாக ரஷியா அறிவித்துள்ளது.
கார்கீவ்வில் இருந்து பின்வாங்கும் ரஷியா, தனது வணிக பாதைகளை காப்பதற்காக, கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் டொனெட்ஸ்க் மீது பல்முனை தாக்குதல் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது...
பொருளாதார நெருக்கடியால் பெரும் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். புதிய மந்திரிசபை இன்று பதவியேற்க உள்ளது.
இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தூதரகத்தின் டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் நிலைத்தன்மையை இந்தியா நம்புகிறது. ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளதன் அடிப்படையில் ஜனநாயக வழிமுறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளது’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதைப்போல இலங்கை மக்களுக்கான உதவிகள் தொடரும் எனவும் தூதரகம் தெரிவித்து உள்ளது....
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
இந்த முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய ...
ரஷியா- உக்ரைன் போர் கடந்த 77-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு ரஷியா தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷியா கைப்பற்றி இருந்தது. போரின் தொடக்கத்திலேயே கார்கிவ் ரஷியாவின் பிடியில் சிக்கியது.
இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் போரில் உக்ரைன் பல இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி ரஷ்யா ஆக்கிரமித்த கார்கிவ் நகரத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள பல கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டெட்டியானா அபட்செங்கோ த...
பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில் சமையல் கியாசுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இதனால் கியாஸ் நிரப்பும் மையங்களில் மக்கள் நாள் கணக்கில் காத்திருந்து கியாஸ் பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில் சமையல் கியாஸ் கையிருப்பு தீர்ந்து விட்டதால், நாடு முழுவதும் சமையல் கியாஸ் வினியோகம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
புதிய கையிருப்பு வரும் வரை கியாஸ் வினியோகம் செய்ய முடியாது என இலங்கையின் முன்னணி கியாஸ் நிறுவனமான லிட்ரோ கியாஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் அறிவித்து உள்ளது.
தற்போதைய நிலையில் தொழிற்சாலைகளுக்கான கியாஸ் மட்டுமே கையிருப்பு இருப்பதால், சமையல் கியாசுக்காக மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவன தலைவர் விஜிதா ஹெராத் தெரிவித்து உள்ளார்.
அடுத்த கியாஸ் தொகுப்பு வருகிற வெள்ளி அல்லது சனிக்கிழமை தான் வரும் எனவும் அவர் கூறியுள்ளார்....
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த தொடர் போராட்டங்களின் எதிரொலியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதை தொடர்ந்து இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
இலங்கையில் நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷே பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியது.
பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இ...
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷியா மற்றும் அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள பெலாரஸ் நாட்டின் மீதும் பொருளாதார வர்த்தக தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது. 1.7 பில்லியன் பவுண்டகள் மதிப்பில் இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி வரிகள் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி தடைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இது புதின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்தும் என்றும், உக்ரைன் மக்களுக்கு எதிரான அவரது சட்டவிரோதப் படையெடுப்பை தடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் சர்வதேச வர்த்தகத்திற்கான இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்-மேரி ட்ரெவெல்யன் தெரிவித்தார்.
ரஷியா-உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில், இரு நாடுகள் இடையே சமாதான பேச்சுவார்த்தை மீண்டும் தொடர எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஜி-7 நாடுகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய இத...
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார். இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த டுவீட்டை பதிவிடுவதற்கு முன்னர் அவர் ரஷிய மொழியில் டுவீட் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
அதில் ‘ உக்ரைனின் சர்வாதிகாரி படைகளுக்கு ராணுவ தொலைத்தொடர்பு கருவிகளை எலான் மஸ்க் அளித்து வருகிறார்.
நீங்கள் என்ன தான் முட்டாள்தனமாக நடந்துகொண்டாலும் நீங்கள் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து உக்ரைனுக்கு எலான் மஸ்க் உதவி செய்வதால் ரஷிய படைகள் அவருக்கு மிரட்டல் விடுத்திருக்க வேண்டும்.
அதனால் அவர் இறந்துவிடலான் என ட்விட் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைகோள் மூலம் அந்நாட்டிற்கு ப்ராட்...