கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா இணையும் ROOT –”Running Out of Time’ கிரைம் த்ரில்லர்!
Verus Productions-ன் புதிய SCI-FI கிரைம் த்ரில்லர் படமான ‘ROOT – Running Out of Time’ இணையும் கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா;
பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா, ROOT படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம்;
Verus Productions தனது முக்கிய படமான ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லரை அறிவித்துள்ளது. சூரியபிரதாப் எஸ் இந்த படத்தை இயக்குகிறார், ’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்தவர், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர்.
படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தி...









