ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ‘ நாக பந்தம் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
*ராணா டகுபதி வெளியிட்ட விராட் கர்ணா நடிக்கும் ' நாக பந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தில் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் இளம் நாயகன் விராட் கர்ணாவின் பிரீ - லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. இது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாதற்கு முன்னரே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. திரைப்பட தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இயக்கியுள்ள இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராணா டகுபதி வெளியிட்டார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் ப...









