என்னையும் ரவியையும் போல அனைத்து நடிகர்களும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினால் பல நல்ல விஷயங்கள் வெளியாகும் – நடிகர் சிவகார்த்திகேயன்
என்னையும் ரவியையும் போல அனைத்து நடிகர்களும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினால் பல நல்ல விஷயங்கள் வெளியாகும் - நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பேசும்போது,
இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பு நிறுவனம் என்பது சாதாரண விஷயம் அல்ல. நம்முடைய கனவை திரையில் கொண்டு வரக்கூடிய மிகவும் பொறுப்பு மிகுந்த விஷயம். ரவிமோகன் சரி எனக்கு அவ்வளவாக தெரியாது. நான் சார் என்று தான் கூப்பிடுவேன். சினிமா துறையில் அவர் என்னைவிட சீனியர்.
பராசக்தி படத்தின் போது தான் அவருடன் நெருங்கி பழகக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் நல்ல மனிதர் நம் அவருடைய படங்களை பார்த்து அவர் இப்படித்தான் இருப்பார் என்று ஒரு எண்ணம் இருக்கும். அவர் அப்படியேதான் இருக்கிறார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது மட்டுமில்லாமல் நேற்று எனக்கு போன் செய்து, நாளைக்கு நிச்சயம் வந்துருங்க ப்ரோ என்று நினைவுப...









