வெற்றிமாறன் வழங்கும் காவல்துறை உங்கள் நண்பன்
தயாரிப்பாளர் மற்றும் படைப்பாளி வெற்றிமாறன் வழங்கும் “காவல்துறை உங்கள் நண்பன்” !
Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கியது படத்திற்கு தனி முத்திரையை பெற்று தந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அட்டகாச பரிசாக தேசிய விருது பெற்ற படைப்பாளி மற்றும் தயாரிப்பாளர் வெற்றிமாறன் தனது Grassroot film company மூலம் இப்படத்தை வழங்கவுள்ளார்.
Creative Entertainers and Distributors நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இதுகுறித்து கூறியதாவது...
தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமையாக அனைவராலும் போற்றப்படும் வெற்றிமாறன் போன்ற படைப்பாளி இப்படத்தின் மீது கவனம் கொள்வது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் பெரும் ஆசிர்வாதம் ஆகும். நல்ல கதையம்சம் கொண்ட தரமான படங்கள் மீது வெற்றிமாறன் எப்போதும் பெரும் காதல் கொண்ட...








