15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு-பிரபுதேவா..!
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சார்லி சாப்ளின்-2’ படத்தின் மூலம் பிரபு தேவா - பிரபு இருவரும் 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கின்றனர்.
அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’.
கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதற்கட்டப படப்பிடிப்பு கோவாவில் முடிந்த நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதில் பிரவுதே...








