விழுந்து எழுவதும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜெயிப்பதும் லிப்ரா புரொடக்ஷனுக்கு புதிதல்ல… குற்றம் சாட்டியவர்களுக்கு காலம் பதில் சொல்லும் – லிப்ரா ரவி
அனைவருக்கும் வணக்கம்
கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரோமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம்
இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் சுந்தர் , பாரதிரெட்டி மேடம் அவர்களுக்கும் , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்
இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் .அருள்பதி , அவருடன் சேர்ந்து உதவிய JSK சதீஷ் குமார், தேணாண்டாள் முரளி , H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்...









