உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன்.
உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம் யாருமே திருடவில்லை பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’.சிவகார்த்திகேயன்.
அறிவு என்ற கதாபாத்திரத்தின் உணர்வுபூர்வமான, உணர்ச்சிகரமான பயணம்தான் படம். ஒட்டுமொத்த வேலைக்காரர்களுக்கான படமாக இருக்கும். நாம் உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம். அந்தப் பணம் எங்கே போகிறது, யாருமே திருடவில்லை. அப்படியானால் என் பணம் எங்கே என்பதற்கான விடைதான் ‘வேலைக்காரன்’ என்கிறார் சிவகார்த்திகேயன்.
வேலைக்காரன் அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன் என்ன சொல்கிறார்...
இப்படத்தின் மூலமாக நிறையக் கற்றுக்கொள்ள முடிந்தது. ஃபகத் பாசில் எப்படி ஒரு காட்சியைப் புரிந்துகொள்கிறார், எப்படி நடிக்கிறார் என்று உன்னிப்பாகக் கற்றுக்கொண்டேன். இம்மாதிரியான படங்களை திரையுலகின் அனுபவப் பாடமாகப் பார்க்கிறேன். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அப்படியொரு முக்கியக் கதாபாத்த...









