சென்னையின் இருட்டு உலகம் சி.வி.குமாரின் “கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்”
அட்டக்கத்தி’ படம் தொடங்கி பல்வேறு படங்களைத் தயாரித்தவர் சி.வி.குமார். நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த அவர், ஏற்கனவே ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் களம் இறங்கினார். இப்போது ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்ற பெயரில் இரண்டாவது படத்தையும் எடுத்திருக்கிறார். இந்தப் படம் சென்ஸாருக்கு தப்புமா என்பதே இப்போதைய கேள்வி!
ஜெயிலுக்குள்ளயே போதைப் பொருட்கள் தாராளமாக புழங்கும் போது, இவ்வளவு பெரிய சென்னையில் எவ்வளவு போதைப் பொருட்கள் புழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா!? கஞ்சா, ஹெராயின், சரஸ் என்று ஆரம்பித்து சென்னையில் கிடைக்காத போதைப் பொருட்களே கிடையாது!
போதை பழக்கத்திற்கு ஆளாகும் ஒரு இளம் ஜோடி எவ்வளவு சிக்கலுக்குள்ளாகிறார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன். அதன் பின்னணியில் இருக்கும் நிழல் உலக வாழ்க்கையை இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் சொல்லாத அளவுக்கு டீடெய்லாக சொல்லியிரு...









