சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!
சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் ஜோடியை வைத்து கடந்த சில வருடங்களுக்கு 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார் கிருத்திகா உதயநிதி.
அதன் பின் இந்த ஜோடி மீண்டும் 'சுமோ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்த படத்தை எஸ்பி ஹோசிமின் என்பவர் இயக்க உள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது
ஜப்பானில் புகழ்பெற்ற சுமோ என்ற விளையாட்டு போட்டியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது.
அதோடு இந்த படத்தில் நிஜமான 18 சுமோ வீரர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு விடிவிகணேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது....









