திங்கட்கிழமை, நவம்பர் 9
Shadow

MOVIES

சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..!

சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சீன மொழி பேசப் போகும் அஜீத்தின் நேர் கொண்ட பார்வை..! அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக சீன மொழி டப்பிங் செய்யும் வேலைகளில் படக்குழு மும்முரமாக இறங்கியுள்ளது. தமிழ், இந்தியில் அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை' படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் சீனாவில் நவம்பர் அல்லது டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. ஏற்கனவே போனி கபூர் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த மாம் படம் சீனாவில் ரிலீஸ் ஆகி வசூல் மட்டுமே சுமார் 100 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது. அதனால் அதே நிறுவன தயாரிப்பை சீனாவில் வெளியிட சிக்கல் எதும் இருக்காது. அஜீத் படம் சீனாவில் ரிலீஸ் ஆக உள்ளது அவர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது....
பீட்ரு… அம்சவர்தன் படத்தில் பஞ்ச் வசனம்..!

பீட்ரு… அம்சவர்தன் படத்தில் பஞ்ச் வசனம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தாதா87 படத்திற்கு பிறகு... பிறகு படத்தின் நாயகன் அம்சவர்தனை கதையின் நாயகனாக்கி பீட்ரு என்ற படத்தை இயக்கி வருகிறார் விஜய்ஸ்ரீ. தாதா87 படத்தில் எப்படி சாருஹாசனை சத்தமில்லாமல் பெரிய தாதாவாக வலம் வரச் செய்து படத்தை ஹிட் ஆக்கினாரோ அதே போல பீட்ரு படத்தில் அம்சவர்தனை கலகலப்பாக அதே நேரம் டெரர் உடம்புடன் வலம் வரச் செய்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ. இதிலும் அம்சவர்தன் தாதா கெட்டப்பில் இருந்தாலும் கலகலப்புக்கு குறையிருக்காது. காமெடி நடிகர் பட்டாளம் பலரை பீட்ருவில் அம்சவர்தன் கூடவே வலம் வரச் செய்வதால் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பே தட்டாதாம். அதே நேரம்... "எத்தனை பேர் எதிர நிக்குறான்றது முக்கியமில்ல நாம யார் எதிர நிக்குறோம்றது தான் முக்கியம்... எதிர பீட்ருடா... " என்று தெறிக்கும் பஞ்ச் வசனங்களும் படத்தில் ஆங்காங்கே வந்து தாக்குமாம். அடிப்படையில் இயக்குனர் விஜய்ஸ்ரீ...
படம் தோல்வி… தயாரிப்பாளருக்கு லாபம் – மிஸ்டர் லோக்கல் பற்றி ஹீரோ பேச்சு..!

படம் தோல்வி… தயாரிப்பாளருக்கு லாபம் – மிஸ்டர் லோக்கல் பற்றி ஹீரோ பேச்சு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் எனது பயணம் : சிவகார்த்திகேயன் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பட இசை வெளியீட்டு விழா ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது கூறியதாவது: மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. எனினும், வர்த்தக ரீதியாக தயாரிப்பாளருக்கு அந்த படம் லாபம் ஈட்டி உள்ளது. நட்பு, துரோகம், சாதனை கலந்தது தான் எனது பயணம். தோல்வியிலும் உடன் இருக்கின்ற ரசிகர்கள் தான் என்னுடைய பலம். இனி எனது படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும். எனது அடுத்த தயாரிப்பில் அருவி பட இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் மூன்றாவது படமாக எனது தயாரிப்பில் வரும்....
ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

ரஜினியின் 2.0 சீன மொழியில் ஜூலை 12ல் ரிலீஸ்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளி வந்த படம் 2.0. ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடித்திருப்பார். அக்‌ஷய்குமார் வில்லனாக நடித்த இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் தமிழ் இந்தி மொழியில் ரிலீஸ் ஆனது. ரஜினிக்கு உலகம் முழுதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜப்பான், சீனாவில் ரஜினிக்கு தனி மவுசு உண்டு. அந்த வகையில் 2.0 படத்தை சீன மொழியில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் முடிந்து லைகா நிறுவனம் ஜூலை 12ம் தேதி சீனாவில் படத்தை ரிலீஸ் செய்கிறது....
இரட்டை வேடத்தில் விஜய் :  ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இரட்டை வேடத்தில் விஜய் : ’தளபதி 63’ லேட்டஸ்ட் அப்டேட் ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார். இது விஜய்க்கு 63 வது படமாகும். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் பெயர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இப்படத்தின் ஷாருக்கான் வில்ல...
பெண் கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உறவுகளை தேடும் “சிறகு”..!

பெண் கவிஞர் குட்டி ரேவதி இயக்கத்தில் உறவுகளை தேடும் “சிறகு”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உறவுகளின் புரிதல் தேடிப் பயணிக்கும் இரு இளைஞர்களின் கதை. இசையும், பயணமும் இரண்டறக் கலந்திருக்கும் கதைக்களம். சென்னையில் தொடங்கும் இப்பயணம் கன்னியாகுமரிி  வரை நீள்கிறது.எல்லோரும் இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் இயற்கையோடு இயைந்த பயணமும் இசையுமே புத்துணர்வைக் கொடுக்கும் என்கிறது 'சிறகு'. 'மெட்ராஸ் ', 'கபாலி', 'வடசென்னை ', 'சண்டைக்கோழி-2 ', 'பரியேறும் பெருமாள் ',  ஆகிய படங்கள் மூலம் நமக்குஅறிமுகமான ஹரி கிருஷ்ணன் இப்படத்தின் நாயகன். நடனத்திலும், யோகாவிலும் சிறந்த, அழகியஇளம் அக்ஷிதா இப்படத்தின்நாயகியாகிறார். டாக்டர் வித்யா, நிவாஸ்ஆதித்தன் ஆகியோர் இரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். காளி வெங்கட்  நட்புக்காக இணைந்துள்ளார் . காட்சிகளை கண்களுக்குக்  குளுமையாக ஒளிப்பதிவு செய்திருப்பவர்  ராஜா பட்டாச்சார்ஜி . 'பியார் பிரேமா காதல்' படத்தின்  மூலம் நமக்க...
புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

புதுமுகங்கள் நடிக்கும் “காதலும் மோதலும் “

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  புதுமுகங்கள் நடிக்கும் "காதலும் மோதலும் " புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் சதீஷ் இயக்குகிறார்.அறிமுக கதாநாயகனாக அமுதன் , சுமாபூஜாரி ,அங்கணா,தீர்தா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தினை யூனிக் சினி கிரேஷன் சார்பில்  ரவ்னக் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மோகன்குமார் ஒளிப்பதிவு செய்ய ஜஸ்டின் பிரொன்டோஸ் படத்தொகுப்பு மேற்கொள்ள கிறிஸ்டி இசையமக்கிறார். இப்படத்திற்கு சண்டை பயற்சியாளராக டேன்ஜர் மணி மற்றும் நடன இயக்குனராக ரமேஷ் பணியாற்றுகிறார். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் பேரரசு மற்றும் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தலைவர் விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டு படகுழுவினரை வாழ்த்தினர்....
சூரைப் போற்று படக் கதை – சூர்யா வெளியிட்ட ரகசியம்

சூரைப் போற்று படக் கதை – சூர்யா வெளியிட்ட ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  சூரைப் போற்று படக் கதை - சூர்யா வெளியிட்ட ரகசியம் சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் வளர்ந்து வரும் "சூரரைப்போற்று" படம் வரலாற்று படம் என்று செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இது உண்மையல்ல என்றாலும் இப்படத்தில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் சுதா கொங்காரா குறித்து பேசிய அவர், சுதா என் உடன்பிறவா தங்கை, ஆயுத எழுத்து படத்திலிருந்தே அவரை எனக்கு தெரியும். இறுதிச்சுற்று படத்தின்போதே அவருடன் பணியாற்ற விரும்பினேன். இருப்பினும் அதற்கான சூழல் தற்போதுதான் அமைந்துள்ளது. என்கிறார் சூர்யா....
ஆடை இல்லா  அமலாபாலின் ஆடை படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ஷாக்..!

ஆடை இல்லா அமலாபாலின் ஆடை படத்தை பார்த்து சென்சார் அதிகாரிகள் ஷாக்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நடிகை அமலாபால் இப்போது ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போது எல்லாரும் ஷாக் ஆனார்கள். அந்தளவுக்கு அமலாபால் அறைகுறை உடையில்... உடை என்றே சொல்ல முடியாது சும்மா கிழிந்த துணிகளை உடலில் சுற்றிக்கொண்டு கவர்ச்சியாக அந்த படம் இருந்தால் பெரும் சர்ச்சை எழுந்தது. அதிலும் ஆடை என படத்துக்கு பேர் வைத்துக்கொண்டு கதாநாயகியகிக்கு ஆடையற்ற காட்சி எடுக்கிறார்கள் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்த்தேன். புதுமாதிரியான படமாக இருக்கும் "என்றார். தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்ற...
மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

மாநில மொழியில் புதிய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தனுஷ் நடிப்பில்  யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மாரி 2  படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.அதில், ரவுடி பேபி பாடலை தனுஷ் எழுதி பாடியிருந்தார். இந்தப் பாடலுக்கு இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். இந்தப் பாடலில் தனுஷின் நடனத்தைவிட சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைராலான இந்தப் பாடல் பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் பாடல் வெளியான 16 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளையும் 41 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வைகளையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வைகளையும் 157 நாட்களில் 500 மில்லியன் பா...