யாதும் அறியான்’ பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன் !
'யாதும் அறியான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய சிவவகார்த்திகேயன் !
மிரட்டலாகவும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருக்கிறது - சிவகார்த்திகேயன் பாராட்டால் 'யாதும் அறியான்' படக்குழு உற்சாகம்
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயரிக்க எம்.கோபி இயக்கும் படம் ‘யாதும் அறியான்’. அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒரு காட்டு பங்களாவில் நன்பர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சைக்கோ திரில்லர் ஜானரில் சொல்வதோடு, சைக்கோ திரில்லர் பாணியில் இதுவரை யாரும் கையாளத ஒரு புதிய யுக்தியை இயக்குநர் எம்.கோபி கையாண்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத...









