அரைகுறை ஆடையில் 50 பெண்கள் ஆட்டம்… காங்.,எம்.எல்.ஏ.வின் ரிசசார்ட்டில் மது, மாது கும்மாளம்?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தனியார் ரிசார்ட்டில் பெண்கள் நடனம், மதுவிருந்து ஆகியவை சட்டவிரோதமாக நடைபெற்றதாகவும், இந்த விருந்தில் பங்கேற்றதாக 50 பெண்கள் உட்பட 500 பேரைப் போலீசார் சுற்றி வளைத்தனர்.
வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவுக்கு சொந்தமாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் ஆர்ச்சிட் ரிசார்ட் உள்ளது.
இங்கு ஹோலி பண்டிகையன்று அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாகவும் அந்த மது விருந்தில் பலவிதமான போதை மருந்து பயன்படுத்துவதாகவும் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலைத் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் நள்ளிரவை கடந்து விடிய விடிய மூன்று மணிவரை சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த மேனஜர் சைமன் கைது செய்யப்பட...









