அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. மனு தாக்கல் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன.
ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.
அப்போது அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவு செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலே இடங்கள் ஒதுக்குவதால் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுக...









