திங்கட்கிழமை, ஆகஸ்ட் 24
Shadow

தமிழக அரசியல்

அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!

அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. மனு தாக்கல் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவு செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலே இடங்கள் ஒதுக்குவதால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுக...
ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்!

ஆட்டோ சின்னம் கேட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு செய்துள்ளது. தமிழகத்தில் பிப்ரவரி-19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.  இதற்கென பல கட்சிகளும் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகிறது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தினை சார்ந்தவர்கள் தங்களுக்கென்று பொதுவாக ஆட்டோ சின்னத்தினை வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில தேர்தல் ஆணையம்,  அவர்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது  ...
சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!!

சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில், தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.   இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் க...
சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சமூக நீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை விரைவில் தொடங்க திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  AIBCF, SRA, PAGAAM, BAMCEF, We The People மற்றும் LEAD INDIA ஆகிய அமைப்புகள் இணைந்து “சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்” என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில உணவு, நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி. முகம்மது பஷீர், அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, PAGAAM நிறுவனர் சர்தார் தஜிந்தர் சிங் ஜல்லி, BAMCEF நிறுவனர் பி.டி. போர்க்கர், LEAD அமைப்பின் தல...
டாக்டர் ராமதாஸ் புதிய உருட்டாக “வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” கோஷம்!

டாக்டர் ராமதாஸ் புதிய உருட்டாக “வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” கோஷம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  டாக்டர் ராமதாஸ் புதிய உருட்டாக “வட தமிழக தலைவர்கள் புறக்கணிப்பு” என்ற கோஷத்தை கையில் எடுத்திருக்கிறார். சென்னையில் இன்று நடைபெற்ற் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அரசின் அலங்கார ஊர்திகளில் இந்திய விடுதலைக்கு போராடிய வட தமிழக தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாமக தலைவர் ராமதாஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டின் 73வது குடியரசுத் தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் தமிழக அரசின் சார்பில் குடியரசுத் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி, பங்கேற்று தேசிய கொடியை பறக்கவிட்டார். இதை தொடர்ந்து தமிழக அரசின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன. இந்நிலையில், இந்த அணிவகுப்பில் வடதமிழக விடுதலை போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக ஒரு டிவிட் பதிவை போட்டிருக்கிறார் ராமதாஸ். அதில் சென்னையில...
தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

தமிழ்தாய் வாழ்த்து பாடலை அவமதித்து தமிழகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயலும் மத்திய அரசு அதிகாரிகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், வீடியோ
      சென்னை ரிசர்வ் வங்கியில் குடியரசு தின விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காகது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது..  நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. அந்த வகையில் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில், குடியரசு தினத்தை ஒட்டி வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என். சுவாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.. பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.. அப்போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு சில இதுகுறித்து விளக்கம் கேட்ட போது, ”எழுந்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலர் சொல்ல அந்த உத்தரவை காட்டுங்கள் என கேட்டபோது, ...
பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

பிப்ரவரி 19ல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் முடிந்தும் அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.   இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனை...
தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

தமிழர்கள் இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை இந்தி ஆதீக்கத்திற்கு எதிரானவர்கள் – முதல்வர் ஸ்டாலின் பளீச்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக ஊர்திக்கு திட்டமிட்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்   மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழினம் மேன்மை அடைந்து உள்ளதாக புகழாரம் சூட்டினார். செம்மொழி தகுதியை தமிழக்கு பெற்றுத் தந்தது, மெட்ராஸ் பெயரை சென்னை என மாற்றியது தமிழில் வழிபாடு செய்யும் உரிமையை வழங்கியது என திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். தமிழ், தமிழர் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல என்று கூறிய முதலமைச்சர், ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல, ஹிந...
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றிவைத்த கவர்னர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவப்பட்டது. பின்னர், அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றார்.   இந்நிலையில், 2022 ஆம் ஆண்டிற்கான தமிழகத்தின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றில் உள்ள காவல் நிலையங்களில் மிகவும் சிறப்பாக பணிகளை செய்தல் குற்றங்களை குறைத்தல், உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றில் மத்திய அரசின் மூலம் வரையறுக்கப் பட்ட திறநளவிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையத்திற்கு முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் அரசால் வழங்கப்பட்டன. அதில் தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பிடித்த திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த திருப்பூர் தெ...