செவ்வாய்க்கிழமை, மே 19
Shadow

தமிழக அரசியல்

பணமோசடி வழக்கு… பிரபல பாலிவுட் நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

பணமோசடி வழக்கு… பிரபல பாலிவுட் நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை!

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகைகள்
பணமோசடி வழக்கு... பிரபல பாலிவுட் நடிகையிடம் அமலாக்கத்துறை விசாரணை! கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் உள்பட பலர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையில் உள்ளார். இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத...
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது!

ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது! தமிழக சட்டசபையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில்  ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்....
போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு! சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ‘தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:- இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து 29.8.2021 வரை தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 11,247 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ...
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை! கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் அலை ஓய்ந்த பிறகு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. ஆனால் மக்கள் முறையானபடி தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக கடுமையான கொரோனா 2-வது அலை தாக்கியது. தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த முடியாதபடி அதிகரித்தது. அந்த சமயத்தில்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சியை பிடித்து இருந்தது. மே மாதம் 2-வது வாரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 ஆயிரத்தை எட்டும் அளவுக்கு சென்றது. தினசரி உயிர்ப்பலி நூற்றுக்கணக்கில் இருந்தது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தமிழகம் முழுவ...
நான் நாகவம்சம் சிவன் யார்? விஷ்ணு யார்? திருமாவளவன்MP பரபரப்பு பேச்சு

நான் நாகவம்சம் சிவன் யார்? விஷ்ணு யார்? திருமாவளவன்MP பரபரப்பு பேச்சு

HOME SLIDER, kodanki darbar, தமிழக அரசியல், வீடியோ
நான் நாகவம்சம் சிவன் யார்? விஷ்ணு யார்? திருமாவளவன்MP பரபரப்பு பேச்சு   https://youtu.be/nE7meR70wNk
CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை… சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…

CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை… சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…

Assembly news, HOME SLIDER, kodanki darbar, தமிழக அரசியல், வீடியோ
CM ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை... சமூக நீதியை சீர்குலைக்க நினைத்தால்…     https://youtu.be/OzcopB6CQos
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் – பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், திரைப்படங்கள்
‘சார்பட்டா பரம்பரை’ பட விவகாரம் - பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்! பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வடசென்னை மக்களிடையே 70-களில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய அரசியல் சூழலையும் இயக்குனர் பா.ரஞ்சித், இப்படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார். இந்த காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாக அதிமுக தரப்பில் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், சார்பட்டா பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பா.ரஞ்சித் உள்பட 4 பேருக்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புற...
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி.க. தயார்: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி! தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி கோவிலில் நேற்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகார பூஜைகளை செய்தார். தொடர்ந்து கோவிலில் உள்ள கோ சாலைக்கு சென்று பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி வழிபட்டார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதை காட்டுகிறது. தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும்,  அ.தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க.வினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்துவது என்பது பல ஆண்டுகளாக நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தே.மு.தி....
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு! தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க்க...