புதன்கிழமை, ஜூலை 8
Shadow

தமிழக அரசியல்

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்!

தமிழக மீனவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்- கமல்ஹாசன்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களிடம் இருந்து 105 நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த படகுகள் ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. அதன்படி இந்த படகுகள் ஏலம் விடும் பணி கடந்த 7-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கமல்ஹாசன் கூறியதாவது:- இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான  கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.  ...
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதன் பின்னர் 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4 கட்டங்களாக அகழாய்வுகள் நடந்துள்ளன. இங்கு கிடைத்த தொல்பொருட்கள், உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை பறை சாற்றுகின்றன.. இதுவரை நடந்த 7 கட்ட அகழாய்விலும் சேர்த்து மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலையில் தொடங்கி வைக்கிறார். இதற்காக கீழடியில் அலங்காரப் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. அகழாய்...
எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்!  வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன  untold veerappan story

எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story

HOME SLIDER, NEWS, story, தமிழக அரசியல், வீடியோ
  எந்த வழக்கிலும் சிக்காத முகிலின் உண்மை முகம்! வீரப்பன் கூட்டாளி சிவா சொன்ன untold veerappan story     https://youtu.be/74EAa_dYhLs
சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக சட்டப்பேர்வையில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி, கடந்த 2021 செப்டம்பர் 13-ம் தேதி ஏகமனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இதை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், 142 நாட்களுக்குப் பின் கடந்த ஒன்றாம் தேதி, ஆளுநரின் தனிச் செயலர் மூலம் நீட் விலக்கு மசோதா, தனக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீட் விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் முதலில் சபாநாயகர் அப்பாவு பேசினார். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சபாநாய...
திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து!

திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட தூத்துக்குடி கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ரத்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  தேர்தல் அலுவலர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாததன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் தேர்தலை ரத்து செய்வதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.   இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் பேரூராட்சியில் 12வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  33 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த 5ந்தேதி நடைபெற்ற  வேட்புமனு பரிசீலனையில்  1வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட  ஜெயராஜ், 2வது வார்டில் தி...
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம்விடுவதை தடுத்துநிறுத்த வேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி தங்கள் வசம் வைத்து இருந்தது. இந்த படகுகளை விடுவிக்க வேண்டும் என மீனவர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தமிழக அரசியல் கட்சிகளும் அதனை வலியுறுத்தின. இதற்கிடையே, இந்த படகுகளை ஏலம் விடும் பணி இன்று தொடங்கியது. முதல் கட்டமாக 65 படகுகள் இன்று ஏலம் விடப்படுகின்றன. இலங்கையில் உள்ள காரை நகரில் ஏலம் விடுவதற்கான பணிகளை இலங்கை அரசு மேற்கொண்டது. அடுத்தடுத்த நாட்களில் மற்ற படகுகளும் ஏலம் விடப்படுகின்றன. வரும் 11-ம் தேதிக்குள் மீதமுள்ள அனைத்து படகுகளையும் ஏலத்தில் விட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் முயற்சிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வ...
கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்து வாக்காளர்களை கவர்ந்துள்ளார். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கண்களைக் கட்டிக்கொண்டு நூதன முறையில் வாக்கு சேகரித்தார். கண்களை கட்டியதால் தள்ளாடியபடி சென்ற வேட்பாளரை கட்சி நிர்வாகிகள் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர்.   இந்த கண் கட்டு எதற்காகவாம் என்றால், “ வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீர்த்த பிறகுதான் வாக்காளர்களின் முகத்தை பார்ப்பாராம்” இந்த  பாஜக தொழில் பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன்.   எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...!...
கு.க. சிகிச்சைக்கு பின் பிறந்த பெண் குழந்தை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கு.க. சிகிச்சைக்கு பின் பிறந்த பெண் குழந்தை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
    குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு, பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த தனம், ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததது. இதனால் 2014ம் ஆண்டு ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் தனம் மீண்டும் கர்ப்பம் தரித்தார். அவரை பரிசோதித்த அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதாக அறிக்கை கொடுத்தனர். இதனால், தனக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, தனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்...
ராமஜெயம் கொலை வழக்கு-  உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

ராமஜெயம் கொலை வழக்கு- உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிஐ-க்கு உதவ, தமிழக காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ல் நடைபயிற்சி சென்ற தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி – கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழகம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, கொலையாளிகள் தொடர்பாக எந்த துப்பு கிடைக்காததால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு 3 மாதத்தில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆ...
”எங்கள் ஆதரவு உண்டு” அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

”எங்கள் ஆதரவு உண்டு” அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் திடீரென முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: தங்களின் 3-2-2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, கவர்னர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்க, அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினரை அனுப்பி வைக்குமாறு தாங்கள் கோரி உள்ளீர்கள். ‘நீட் தேர்வு ரத்து’ குறித்த அனைத்திந்திய அ.தி.மு.க. கருத்துகள் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், 8-1-2022 அன்று நடைபெற்ற ...