ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 23
Shadow

தமிழக அரசியல்

ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு…!

ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  ஆற்று மணல்  விற்பனைக்கு புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு...! நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆற்று மணலை எடுத்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கான எளிய வழிமுறைகளை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை, பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இருப்பை பொருத்து வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சு...
பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பிரதமர் மோடி மதுரையில் 12-ம்தேதி பங்கேற்க இருந்த பொங்கல் நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு? காரணம் இதுதானா? தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கல்லூரிகளின் கட்டுமான பணிகள் பல மாதங்களாக நடந்து வந்தது. இந்த கட்டிடங்களை வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திரந்து வைக்க முடிவு செய்யப்பட்டிர்ருந்தது. அதே தினத்தில் மதுரையில் தமிழக பாஜக சார்பில் பொங்கல் விழவை நடத்த திட்டமிட்டிருந்தார்கள். அந்த பொங்கல் விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருவதால் மீண்டும் இரவு ஊரட...
காலையில் மதுரை மாலையில் திருச்சி  திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன?

காலையில் மதுரை மாலையில் திருச்சி திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
காலையில் மதுரை மாலையில் திருச்சி திடீரென சிறை மாற்றப்பட்ட ராஜேந்திரபாலாஜி! காரணம் என்ன? நிர்வாக காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சுமார் 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்விருந்த நிலையில் தலைமறைவானார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு  கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அவரை கைது செய்வதற்காக தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில்  கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நேற்று காலை காரில் சென்று கொண்டிருந்த ராஜேந்திர பாலாஜியை தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் கைது செய்ய்யப்படும்...
சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” – விடுதலைச் சிறுத்தைகள்

சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” – விடுதலைச் சிறுத்தைகள்

Assembly news, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
  சட்டப்பேரவையை அவமதிக்கும் ஆளுநர் உரையைப் புறக்கணிக்கிறோம்” விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு “ அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய The Undergraduate Medical Degree Courses Bill, 2021 ஐ, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சட்டப் பேரவையை மேதகு ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசையும் அதைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மக்களையும், அரசியலமைப்பு சட்டத்தையும் அவமதிக்கிற ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் புறக்கணித்து வெளிநடப்புச் செய்கிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்...
ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும்: நீதிமன்றம் கருத்து

ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும்: நீதிமன்றம் கருத்து

HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
ஆவின் ஊழல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை தேடிவருகிறது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும், இதுவரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய முடியாமல்...
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம்

பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
  பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் இன்று தொடக்கம் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டு தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாட, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் பொங்கல் வைப்பதற்கு  தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் போன்ற பொருட்களும், சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றுடன் துணிப்பையும் வழங்கப்படுகிறது. மொத்தம் 2 கோடியே 15 லட்சத்து 48,060 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று ...
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்

10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் – போராடும் சி.என்.ஆர் – முக நூலில் வெளுத்த நாகரத்தினம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
10.5% இட ஒதுக்கீடு ஏமாற்றும் இராமதாஸ் - போராடும் சி.என்.ஆர் - முக நூலில் வெளுத்த நாகரத்தினம் வன்னியர்களுக்கான, 10.5% சதவிகித, உள் இட ஒதுக்கீட்டு சட்டம், எப்படி, கருவானது/உருவானது❓ எப்படி "குறை" பிரசவ சட்டமானது❓ **************** 1987 ல், MGR ஆட்சியில், 25 வன்னிய உயிர்களை பலி கொடுத்து, 1989ல் பின்னர் வந்த, தி.மு.க ஆட்சியில், வன்னியர் உள்ளிட்ட 108 ஜாதிகளை உள்ளடக்கிய, MBC என்ற பெயரில் 20% சதவிகித, "தொகுப்பு" இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இது, எல்லோருக்கும் தெரிந்த, செய்திதான். அந்த, அரசாணை‌ ஆவணத்தில், 108 ஜாதிகளுக்கான, மக்கள் தொகையும், ஜாதிவாரியாக, தனித்தனியாக, குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி குறிப்பிட்டிருந்தும், மதிப்பெண் அடிப்படையில், மக்கள் தொகையின் அடிப்படையில், ஜாதிவாரி தேர்வு பட்டியல் தாயாரிக்கப்படாமல்,108 ஜாதிகளுக்கும், ஒரே மதிப்பெண் பட்டியல் (Random list) தயார் ச...
ஆசிய வலுதூக்கும் போட்டி: பதக்கம் வென்ற தி.மு.க எம்.எல்.ஏ!

ஆசிய வலுதூக்கும் போட்டி: பதக்கம் வென்ற தி.மு.க எம்.எல்.ஏ!

HOME SLIDER, sports, செய்திகள், தமிழக அரசியல்
இந்திய அணி சார்பாக 140 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் துருக்கியில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராஜா. இவர் சமீபத்தில்  நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்றார். மேலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வானார். இதனையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. ராஜாவை பாராட்டியுள்ளார். இந்த நிலையில் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி சார்பாக 140 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா, இதில் வெண்கலப் பதக்க...
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழகம் முழுவதும் தடையை மீறி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல்-டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு போதுமான இழப்பீடு வழங்க வேண்டும், பொங்கல் கொண்டாட அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் நேரத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாததை கண்டித்தும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். ...
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு!

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 352 கோடி ஒதுக்கீடு! தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதியில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். 2021-2022 நிதியாண்டுக்கான மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்படாமல் இருந்தது. இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வழியுறுத்தி வந்தன. இந்த நிலையில் 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த மொத்த தொகையில் 50 சதவீதமாகும்....