வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

வலிமை படம் ஓடிய தியேட்டரில் குண்டு வீசிய நபர் கைது!

வலிமை படம் ஓடிய தியேட்டரில் குண்டு வீசிய நபர் கைது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள், அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அச்சமயத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள கங்கா யமுனா காவேரி என்ற திரையரங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடினர். இதில் இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்திருந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக...
‘கே.ஜி.எப்-2’ படத்தின் டிரைலர் அப்டேட்!

‘கே.ஜி.எப்-2’ படத்தின் டிரைலர் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர்  வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'கே.ஜி.எப்-2' டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை  6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. https://twitter.com/prashanth_neel/status/1499263301523423232?ref_src=twsrc%5Etfw%...
மாரி செல்வராஜ் படத்தின் புதிய அறிவிப்பு!

மாரி செல்வராஜ் படத்தின் புதிய அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் நாளை(04.03.2022) காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அவர்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்....
3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது!

3 டன் விண்வெளி குப்பை நாளை நிலவில் மோதுகிறது!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  பல உலக நாடுகளால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள், விண்கலங்கள் உள்ளிட்டவை காலாவதியான பின் விண்வெளி குப்பையாக சுற்றி வருகின்றன. இப்படி விண்வெளியில் சுழன்று வரும் இத்தகைய குப்பைகள் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, எதிர்கால விண்வெளி முயற்சிகளையும் மிகவும் கடினமாக்கும் என விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சுமார் 3 டன் எடைகொண்ட விண்வெளி குப்பை மார்ச் 4-ந்தேதி நிலவின் மீது மோதும் என கடந்த ஜனவரி மாதம் நாசா அறிவித்தது. கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ‘பால்கன்9’ ராக்கெட்டின் மேல்பகுதியான ‘பூஸ்டர்’ தான் நிலவின் மீது மோத இருப்பதாக நாசா முதலில் தெரிவித்தது. பின்னர், நிலவில் மோதும் ராக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் உடையது அல்ல என்றும், அது நிலவில் இருந்து மாதிரிகளை சேகரித்து வருவதற்காக சீன விண்வெளி ஆய்வு மைய...
ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

ரயிலில் ஏறி தப்ப முயன்றால் துப்பாக்கியை காட்டி மிரட்டும் உக்ரைன் இராணுவம்’ – இந்திய மாணவர்கள் பகீர் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைனில் போரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ரயில்களில் ஏற விடாமல் உக்ரைனிய பாதுகாப்பு படையினரும், மக்களும் தள்ளிவிடுவதாக அங்குகள்ள தமிழர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர். உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் நடந்து சென்றாவது எல்லையைக் கடக்குமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, கிடைக்கும் வழிகளில் எல்லாம் உக்ரைனை விட்டு வெளியேற, இந்திய மாணவர்கள் முனைந்து வருகின்றனர். ஆனால், அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு செல்வதற்காக ரயிலில் ஏற முயன்ற தங்களை, உக்ரைன் ராணுவமும் காவல் துறையும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தடுப்பதாக இந்திய மாணவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர். உக்ரைனில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் ...
அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உதவிய திமுகவினருக்கு நன்றி – மதுரை போஸ்டர் கலாட்டா

அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உதவிய திமுகவினருக்கு நன்றி – மதுரை போஸ்டர் கலாட்டா

HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
மதுரை மாநகராட்சி 88-வது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு உதவிய திமுகவினருக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 88வது வார்டு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வேட்பாளராக சகுந்தலாவும், அதிமுக சார்பில் பிரேமாவும், அமமுக, பாஜக, நாம்தமிழர், மக்கள் இயக்கம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் உள்ளிட்ட எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்த அதிமுக வேட்பாளர் பிரேமா 1,187 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். மதுரை மாநகராட்சி 88வது வார்டு திமுகவின் கோட்டையாக இருந்த நிலையில், கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. "இதனால்...
ukraine war : இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துள்ள உக்ரைன் அரசு – ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு!

ukraine war : இந்திய மாணவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துள்ள உக்ரைன் அரசு – ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள்
  உக்ரைன் - ரஷியா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் நேற்று உத்தரவிட்டிருந்தது. கார்கிவ்வில் தங்கியுள்ள இந்தியர்கள்,  பெசோசின், பபாயி, பெஸ்லியுடோவ்கா ஆகிய பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டிருந்தது. இதற்காக உக்ரைன் நாட்டு நேரப்படி நேற்று மாலை 6 மணிவரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய மாணவர்கள் அங்கிருந்து வெளியேறுவதில் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கார்கிவ் நகரில் இந்திய மாணவர்கள் குழுவை பிணைக் கைதிகளாக உக்ரைன் படைகள் பிடித்து வைத்திருப்பதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. எங்கள் தகவல்களின்படி, உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேறி பெல்கோரோட் செல்ல விரும்பும் இந்திய மாணவர்களின் பெரும் குழு...
கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்- குமாரசாமி குற்றச்சாட்டு!

கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்- குமாரசாமி குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம்- குமாரசாமி குற்றச்சாட்டு! போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் பரிதவிக்கும் நிலை மற்றும் அங்கு கர்நாடக மாணவர் நவீன் கொல்லப்பட்டது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி கூறியதாவது:- போர் நடைபெறும் உக்ரைனில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் மரணம் அடைந்திருப்பது, நீட் தேர்வின் பிரதிபலிப்பாகும் நவீன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96 சதவீதமும், 12ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்றுள்ளார். அப்போதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக சதவீத மதிப்பெண் பெறுவது எளிதானது அல்ல. இருந்தும் மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இதனால் நவீன் தனது மருத்துவக் கனவை நனவாக்குவதற்காக உ...
”யார்றா இது?” இணையத்தை வைரல் ஆக்கிய அஜீத்தின் புது கெட்டப்!

”யார்றா இது?” இணையத்தை வைரல் ஆக்கிய அஜீத்தின் புது கெட்டப்!

CINI NEWS, HOME SLIDER, Photos, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  வலிமை ரிலீசுக்கு பின் நடிகர் அஜீத்தின் புது கெட்டப் வெளியாகி இணையத்தை வைரல் ஆக்கியுள்ளது. வெள்ளை தாடி, முடியுடன் கருப்புக் கண்ணாடி அணிந்த அஜித் மனைவி ஷாலினி, மகன், மகளுடன் இருக்கும் குடும்பப்படமும் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.    
மார்ச் 26-ம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

மார்ச் 26-ம் தேதி துபாய் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் கண்காட்சியில் பங்கு கொள்வற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 26, 27ம் தேதிகளில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், முதலீட்டை ஈர்ப்பதற்காக முதன்முறையாக மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணம் இது. 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் சர்வதேச கண்காட்சி இந்த (மார்ச்) மாத இறுதியில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில், தமிழக அரசின் சார்பாக கைத்தறி விவசாயம் மற்றும் சிறு-பெரு தொழில் தொடங்க சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் அங்கே அரங்கு அமைக்கப்படுகிறது. இந்நிலையில், அங்கே, பல நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....