சிறையிலிருந்து வீடியோ காலில் பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ஹரி நாடார்!
தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை எனப் பெயர் எடுத்தவர் ஹரி நாடார். இவர் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்.
ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடார், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைக்குப் போன சில நாட்களிலேயே அவரது முதல் மனைவி ஷாலினிக்கும், இரண்டாவது மனைவி மஞ்சுவுக்கும் இடையே சண்டை உருவானது.
சமூக வலைதளத்தில் இருவரும் ஹரிநாடார் தன்னுடைய கணவர் என வாதங்களை முன்னிறுத்தி வருவதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து ஹரி நாடார் நீக்கப்படுகிறார் என கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அறிவித்தது பெரு...









