வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

நடமாடும் புலி-சிங்கத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம், தூங்கலாம் சீனாவில் த்ரில் ஹோட்டல்!

நடமாடும் புலி-சிங்கத்தைப் பார்த்துக் கொண்டே சாப்பிடலாம், தூங்கலாம் சீனாவில் த்ரில் ஹோட்டல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    காட்டுக்குள் இருக்கும் புலியைப் பார்த்துக் கொண்டே உணவருந்தாலும், தூங்கலாம், சிரித்து பேசி மகிழலாம். ஆனால், புலி நம்மை ஏதும் செய்யாது. குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் புலியை அடைத்து விடுகிறார்கள். இப்போது இது தான் லேட்டஸ்ட் ட்ரெண்டாகிறது. உலகம் முழுவதும் உணவு விடுதிகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புக்கள், சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நாந்தோங் வன பூங்கா அருகில் அமைந்துள்ளது புலி காப்பகம். அதனை அடுத்துள்ள சீன விடுதி தமது வாடிக்கையாளர்கள், விருந்தினர்களுக்காக சிறப்பு அறைகளை உருவாக்கியுள்ளது.   அதில் குறிப்பாக  புலி கூண்டுகளை  விருந்தினர்களின் அறைகளுக்குள்  வைத்து அதை "மிருக அறைகள்" என  விளம்பரப்படுத்தியது. இந்த விளம்பரம்  கடும் விமர்சனத்திற்கு...
பெண்காவலர் பணிநேரம் குறைப்பு!

பெண்காவலர் பணிநேரம் குறைப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியாவில்  பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் ஆண் பெண் காவலர்களுக்கு ஒரே அளவு பணிநேரம் தான். ஆனால் மகாராஷ்டிரா தற்போது பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பெண் காவலர்கள்  8 மணி நேரம் மட்டும் பணியில் இருந்தால் போதும் எனத் தெரிவித்துள்ளது.   இந்த உத்தரவை  அம்மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். தற்போது ஆண் மற்றும் பெண் காவலர்களின்  பணி நேரம் 12 மணி நேரமாக உள்ளது. தற்போது பெண் காவலர்களுக்கு சிறந்த  வேலை மற்றும் வாழ்க்கை வழங்கும் நோக்குடன் பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது....
15ம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை நேரடியாக அனுமதிக்க திட்டம்!

15ம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்தில் பக்தர்களை நேரடியாக அனுமதிக்க திட்டம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ம் தேதிக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என பிப்ரவரி மாதத்திற்கான 1 ம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த டிக்கெட்டுகள் 8 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுக்களையும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டனர். 15ஆம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்று  குறையும் என நிபுணர்கள் குழுவினர் தெரிவித்துள்ளதால் அதன் பிறகு நேரடியாக இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டிருப்பதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்....
உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்!

உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் – ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட வேண்டும் - ரஷ்யாவுக்கு பிரிட்டன் வலியுறுத்தல்! நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை மேற்கத்திய நாடுகள் நிராகரித்ததை தொடர்ந்து தனது உக்ரைன் நாட்டுடனான எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால்  ஐரோப்பிய பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.அடுத்த மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இந்நிலையில் போர் மூலம் இரத்தம் சிந்துவதை தவிர்க்குமாறு ரஷ்யாவை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுத்தி உள்ளார். இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாவது: வரும் நாட்களில் ஜான்சன் இப்பகுதிக்கு விஜயம் செய்ய உள்...
எல்லையில் வலுவான தடுப்பு வேலி – பி.எஸ்.எப். நடவடிக்கை!

எல்லையில் வலுவான தடுப்பு வேலி – பி.எஸ்.எப். நடவடிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
எல்லையில் வலுவான தடுப்பு வேலி - பி.எஸ்.எப். நடவடிக்கை! இந்தியா-வங்காளதேச எல்லையில் போதைப்பொருள், கால்நடைகளை கடத்துவோர் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர். இந்த பகுதியில் போடப்பட்டுள்ள வேலி பழையதாக வலு இழந்ததாக உள்ளதால் அதை துண்டித்து சட்ட விரோதமாக கடத்தல்காரர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து விடுகின்றனர். இதை தடுக்கும் வகையில் நவீன வகை வேலியை எல்லைப் பாதுகாப்பு படை அமைத்துள்ளது. இதன்படி இந்த வேலியை யாரும் வெட்டவோ அல்லது ஏறி குதிக்கவோ முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட உழைப்பு மற்றும் வலுவுடன் இது இருக்கும் என வடக்கு வங்க எல்லை பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அஜய் சிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகள் இடையே வேலி இல்லாத பகுதியில் 110கிலோ மீட்டர் தூரம் தற்போது ஆன்டி கட்-ஆன்டி க்ளைம்ப் தடுப்பு வேலி அமைக்கப் பட்டுள்ளதாகவும், இது மொத்தமுள்ள 4,216 கில...
ஜூனியர் உலக கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா!

ஜூனியர் உலக கோப்பை – பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஜூனியர் உலக கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா! ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குரூப் சி பிரிவில் முதல் இடம் பிடித்த பாகிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் 2-ம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்தது. டீகே வில்லி 71 ரன்னும், கொரே மில்லர் 64 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் காசிம் அக்ரம் 3 விக்கெட்டும், அவைஸ் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தான் சிக்கி திணறியது. பாகிஸ்தான் மெஹ்ரன் மும்தாஸ்...
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கையோடு எடுத்துச் செல்லும் போர்டபிள் டாய்லெட்!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கையோடு எடுத்துச் செல்லும் போர்டபிள் டாய்லெட்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், பிரத்யேக போர்டபிள் டாய்லெட் ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும், எந்த வெளிநாட்டுக்கு சென்றாலும் அதை கையோடு எடுத்துச் செல்வார் எனவும், அதை யாராவது தொட்டாலே சுட்டுக் கொலை செய்துவிடுவார் எனவும் அந்நாட்டின் முன்னாள் கமாண்டோ படை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் இளம் அதிபர் கிம் ஜாங் உன், நவீன காலத்து சர்வாதிகாரியாக வர்ணிக்கப்படுகிறார்.   சின்ன விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் கடுமையான தண்டனைகள் உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மிகவும் வித்தியாசமான நபரான கிம் ஜாங் உன்னின் செயல்களும் கவனம் ஈர்ப்பதாகவே உள்ளன. இதன் காரணமாகவே இவரைப் பற்றிய செய்திகளை மக்கள் தேடிப்படிக்கிறார்கள். சமீபத்தில் வடகொரிய அதிபராக 10 ஆண்டுகளை நிறைவு செய்ததுடன், தனது தந்தையின் 10வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, 11 நாட்களுக்கு யாருமே நாட்டில் ...
14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் அசால்ட்டாக பிடித்த நபர்!

14 அடி நீள கொடிய ராஜநாகத்தை வெறும் கையில் அசால்ட்டாக பிடித்த நபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    உலகின் மிக நீளமான கொடிய விஷம் கொண்ட நச்சுப் பாம்பு இனமாக திகழ்வது ராஜநாகம். அதனால் தான் அதனை நாகங்களுக்கு அரசன் என பொருள்படும் வகையில் பெயரிட்டுள்ளனர். பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வசிக்கும் தன்மை கொண்ட இப்பாம்புகள் சுமார் 20 அடி நீளம் வரை வளரக் கூடியதாகும். இவை பிற பாம்புகளை உணவாக கொள்கின்றன. மிக மிக கொடிய விஷமுடைய இந்த நாகத்தின் ஒரு கடியே ஒரு மனிதனை கொல்லவல்லதாகும். இந்த நாகத்தின் கடியால் இறப்பு நேரிடும் விகிதம் 75% ஆக உள்ளது. இப்பாம்பினைக் கண்டாலே பலரும் மிரண்டு ஓடவே செய்வார்கள். இந்த பாம்பு கடித்தால் ஒரு யானையே 3 மணி நேரத்தில் இறந்துவிடுமாம். இத்தனை கொடிய விஷப்பாம்பை தனி ஒருவரால் கையாளுவது பெரும் சிரமம் என கூறப்படுகிறது. அப்படியிருக்க, 14 அடி நீளமுடைய ராஜநாகத்தை வெறும் கைகளால் துனிச்சலாக ஒருவர் பிடித்திருப்பதை கேட்கவே புல்லரிக்கிறதல்...
சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!!

சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு! உயர் நீதிமன்றம் புது உத்தரவு!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் உள்ள பெருங்குடி கிராமத்தில், தாமோதரன் என்பவர், தனக்கு சொந்தமான 10 செண்ட் நிலத்தை பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மூலம் அபகரித்ததாக தற்போதைய சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.   இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாததால், திருநெல்வேலி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அப்பாவு, பிச்சையம்மாள், சுப்பையா, சந்தானம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிடக் க...
மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கணவனை சுத்தியால் அடித்து கொன்ற மனைவி விடுவிப்பு!

மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற கணவனை சுத்தியால் அடித்து கொன்ற மனைவி விடுவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற தந்தையை , தாயே சுத்தியலில் அடித்துக்கொன்றதாக கைதான நிலையில், தற்காப்புக்காக கொலை நடந்ததாகக்கூறி காவல்துறையினர் பெண்ணை விடுவித்துள்ளனர். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 43 வயது நபர் , மது போதையில் தனது 20 வயது மகளிடம் புதன்கிழமை இரவு பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மனைவி கண்டித்துள்ளார். அதனையும் மீறி அத்துமீற முயன்றுள்ளார். மகளை காப்பாற்ற ஒரு கட்டத்தில் கணவனை சுத்தியலால் தாக்கினார். இதில் கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.   இதனையடுத்து சம்பவம் குறித்து அந்தப்பெண் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத...