வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். மேலும் தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள ரஜினி ரசிகர்களும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.   இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். வீட்டில் மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவருடனும் ரஜினி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ்

மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ்

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள்
மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ் பிரபஞ்ச அழகி பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெற்று தந்திருப்பதை நான் மிக பெருமையாக கருதுகிறேன். பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும் ஹர்னாஸ் கவுருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. அவருடன் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு அழகிகள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவில் இருந்தும் நிறைய பேர் ஹர்னாஸ் கவுரை வாழ்த்தினார்கள். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. நான் இந்த பட்டம் வென்றதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது பெற்றோர்களும், மிஸ் இந்தியா அமைப்பு நிர்வாகிகளும் எனக்கு வழி காட்டினார்கள். சர்வதேச போட்டியில் பங்கேற்க அனைத்து துறைகளிலும் என்னுடன் இருந்தவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தந்தனர். எனக்காக இலட்சக் கணக்கானவர்கள் பிரார்த்தனை செய்தனர். நான் பட்டம...
நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி

நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics
நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:- இந்து, இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையேயான போட்டியே நாட்டின் தற்போதைய அரசியல்.  இந்த இரண்டு வார்த்தைகளும் மாறுபட்ட அர்த்தத்தை கொண்டது.  நான் இந்து, ஆனால் இந்துத்துவவாதி கிடையாது. மகாத்மா காந்தி இந்து, ஆனால் கோட்சே இந்துத்துவவாதி. இந்தியா இந்துக்களின் நாடு. இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர்.  ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே இந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் சிந்திக்கிறார்கள்.  அதிகாரத்தை தவிர அவர்கள் வேறு எதையும் விரும்புவதில்லை. அதை பெறுவதற்காக அவர்கள் எதையும் செய்வார...
மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை டி.ராஜேந்தர் வழக்கு …!

மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை டி.ராஜேந்தர் வழக்கு …!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை டி.ராஜேந்தர் வழக்கு ...!! நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார் பணப்பிரச்சினையால் குறிப்பிட்ட  தேதியில் மாநாடு படம் வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதால் கொட்டும் மழையிலும் இரவு பகல் பாராமல் தானும், தனது மனைவியும் மாநாடு படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக  5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் அளித்ததாகவும் . ஆனால் தங்களிடம் சொல்லாமல் சாட்டிலைட் விற்பனை நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் இந்த வழக்கு குறித்து பைனான்சியர் உத்தம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையிய...
இசைஞானியுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி

இசைஞானியுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி

HOME SLIDER, சினி நிகழ்வுகள்
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை  அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் நடிகர்  சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக இருக்கும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இரட்டை கலைஞர்கள் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கிறார்கள். 'மாயோனே மணிவண்ணா..' எனத் தொடங்கும் அ...
நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம் – இயக்குனர் ராஜமவுலி

நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம் – இயக்குனர் ராஜமவுலி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
சென்னையில் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் இயக்குனர் ராஜமவுலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இயக்குனர் ராஜமவுலி பேசியதாவது: நான்கு வருடங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். அதனால் அரசியல் பேச வேண்டாம், ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தைக் குறித்து மட்டும் பேசுவோம் சென்னை வரும்போது பள்ளி மாணவனைப் போல் உணர்கிறேன். சென்னை எனக்கு ஒரு பள்ளி. அனைத்தையும் கற்றுக் கொடுத்தது. ஏன் ஹாலிவுட் நடிகர்களை படமெடுக்க வேண்டும்? நம் நடிகர்களே மிகவும் திறமையானவர்கள்தான். நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படமெடுப்போம். தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்வு செய்கிறதோ அவர்களை தான் நான் இயக்குவேன். பாகுபலியைப் போன்றே ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் நிச்சயமாக பேசப்படும் என தெரிவித்தார...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு   தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: * தமிழகத்தில் பணியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். * ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனைவரும் தங்களது பெயரிலும், குடும்பத்தினர் பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்....
விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம்

விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம்

HOME SLIDER, sports, செய்திகள்
விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம் இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) விராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். டோனிக்கு பிறகு அவர் 3 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்தார். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலியின் பேட்டிங் திறன் சமீப காலமாக மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகுவது நல்லது என்று கருத்து எழுந்தது. விமர்சனங்கள் காரணமாக 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியை துறப்பதாக அவர் போட்டிக்கு முன்பே தெரிவித்தார். ஆனால் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகுவார் என்று எதிர...
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர்

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர்

HOME SLIDER, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள்
இணையத்தில் வைரலாகும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலர் பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.   https://www.youtube.com/watch?v=oO8TTM2FgIA&t=1s   டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது...
மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள்

மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள்

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மூத்த ஆய்வாளர்களுக்கு பாரதி நினைவு நூற்றாண்டு விருதுகள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 10.9.2021 அன்று “மகாகவி பாரதியின் வாழ்க்கை குறித்தும், அவரின் படைப்புகள் குறித்தும் ஆய்வு செய்த மூத்த ஆய்வாளர்களான மறைந்த பெரியசாமித்தூரன், ரா.அ.பத்மநாபன், தொ.மு.சி. ரகுநாதன், இளசை மணியன் ஆகியோரின் நினைவாக அவர்தம் குடும்பத்தாருக்கும் மற்றும் மூத்த ஆய்வாளர்களான சீனி விசுவநாதன், பேராசிரியர் முனைவர் மணிகண்டனுக்கும் தலா 3 லட்சம் ரூபாயும், விருதும், பாராட்டு சான்றிதழும் அரசால் வழங்கி கவுரவிக்கப்படும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மகாகவி பாரதியார் மூத்த ஆய்வாளர்களான சீ...