வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! * தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. * பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1.40 லட்சம் மாணவர்கள் இணையதளம் வழியாக மதிப்பெண்களை அறியலாம். * http://tneaonline.org என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக, அரசுப் பள்ளிமாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 17-ம் தேதி வரையும் நடைபெற உள்ளன....
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று ஆலோசனை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- * 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து இன்று மாலை ஆலோசனை நடைபெறுகிறது. * கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் திறக்கப்படும். * நீட் தேர்வை ரத்து செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து வருகிறார். * அனைவரும் ஒன்று சேர்ந்து நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. இவ்வாறு அவர் கூறினார்....
நம்பாதீங்க… எல்லாம் போலி… வடிவேலு அதிரடி!

நம்பாதீங்க… எல்லாம் போலி… வடிவேலு அதிரடி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நம்பாதீங்க... எல்லாம் போலி... வடிவேலு அதிரடி! தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேலு நடிக்கவில்லை. சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் எனக்கு கணக்கு கிடையாது, எ...
கோவிலுக்கு சென்ற மோகன்லால்… ஊழியர்கள் சஸ்பெண்ட்!

கோவிலுக்கு சென்ற மோகன்லால்… ஊழியர்கள் சஸ்பெண்ட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கோவிலுக்கு சென்ற மோகன்லால்... ஊழியர்கள் சஸ்பெண்ட்! கேரளாவில் கொரோனா பரவல் மற்ற ஸ்டேட்டுகளைக் காட்டிலும் தீவிரமா இருப்பதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, பிரசித்தி பெற்ற குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது, அவருடைய கார் கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாக ...
யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்!

யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை... வைரலாகும் புகைப்படம்! தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த தோழிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார் யாஷிகா. மேலும் தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார். தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவமனை...
நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். இந்த மனுவில் யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன். கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் பேனர் முன்பு நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டா கத்திக் கொண்டு வெட்டி பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்! அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் மற்றும் நோவக் ஜோகோவிச் விளையாடினர். இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்....
பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் – நேரில் சந்தித்த மோடி புகழாரம்!

பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் – நேரில் சந்தித்த மோடி புகழாரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் - நேரில் சந்தித்த மோடி புகழாரம்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் 19 பதக்கங்களை குவித்தனர். நாடு திரும்பிய 54 பேர் கொண்ட இந்திய அணி, பிரதமர் மோடி அழைப்பின்பேரில், கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு சென்றது. மோடியுடன் இந்திய அணி வீரர்கள் உரையாடினர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ, நேற்று பிரதமர் மோடியின்  அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டது. பாரா ஒலிம்பிக் வீரர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:- உங்களின் விளையாட்டு செயல்பாடு பாராட்டத்தக்கது. பல்வேறு சிரமங்களை கடந்து சாதித்து இருக்கிறீர்கள். உங்கள் மனஉறுதியையும் பாராட்டுகிறேன். உங்கள் அனைவராலும் நான் ஊக்கம் பெற்றேன். உங்களது சாதனை, ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வளரும் விளையாட்டு ...
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து! மாணவ-மாணவிகளின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தன. அதை கருத்தில்கொண்டும், கொரோனா  தொற்றை மனதில் வைத்தும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, முன்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 720 (180x4) மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மேற்சொன்ன 4 பாடப்பிரிவுகளில் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுகளின...