செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை… பலி 10 ஆக உயர்வு!

டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை… பலி 10 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை... பலி 10 ஆக உயர்வு! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன. வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார். இதேபோல் பல்வேறு இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் நேற்று...
தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உள்துறை அமித்ஷாவுடனான ஆலோசனைக்குப் பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். கலவரம் பாதித்த வட்டாரங்களில் அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.. அமித்ஷா நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற அனைவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினார்....
மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் சினிமா பார்க்கலாம்- ரயில்வே அதிரடி

மெட்ரோ ரயிலில் பயணம் செய்தால் சினிமா பார்க்கலாம்- ரயில்வே அதிரடி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னை விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரெயில் பாதையின் நீளம் 45 கி.மீ தூரமாகும். இதைக் கடக்க ஆகும் மொத்த நேரம் தோராயமாக 40 நிமிடங்கள் ஆகிறது. இந்த பயண நேரத்தில் பயணிகள் அலுப்பில்லாமல் செல்ல சுகர் பாக்ஸ் என்ற அமைப்பை மெட்ரோ ரெயிலில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் சுகர் பாக்ஸ் என்ற மொபைல் ஆப்-ஐ டவுன்லோடு செய்து ரிஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள், சீரியல்களை பார்த்து ரசிக்க முடியும்.ரெயிலில் வழங்கப்பட்டுள்ள வைஃபை மூலம் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பயணிகள் இந்த ஆப்-இல் வீடியோக்களை பார்க்கலாம். வெறும் 10 நிமிடங்களில் திரைப்படத்தை டவுன்லோடு செய்து கொள்ளக் கூடிய வகையில் சுகர் பாக்ஸ் ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளை மகிழ்விக்கவும், மெட்ரோ ரெயிலை பயன்படு...
இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!

இளையராஜா இசையில் இயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    இயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த இளையராஜா. புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. மேலும், பல உயரிய விருதுகளை குவித்துள்ளது. இப்படத்தின் மறு உருவாக்கத்தின் உரிமையை 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' படத்தின் இயக்குனர் சாமி வாங்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:- நான் இயக்கிய மேற்கண்ட மூன்று படங்களும் என்னுடைய அடையாளம் அல்ல. என்னை அடையாளப்படுத்தும் சினிமாவை இனிமேல் தான் இயக்கப் போகிறேன். ஒருமுறை என் அக்கா என் வீட்டிற்கு வந்தபோது 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' திரைப்படத்தை குழந்தைகளுக்கு போட்டுக் காண்பித்தேன். உலகில் உள்ள அனைத்து தரப்பு குழந்தைகளிடம் எப்படி கலந்துள்ளது என்பதை குழந்தைகளின் மூலம் அறிந்தேன். இதுபோ...
சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது! சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என காட்டிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது...
ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

ரஜினியின் அடுத்த படம் “அண்ணாத்த”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், "அண்ணாத்த" ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்த சூழலில் 168வது படத்துக்கு அண்ணாத்த என்று பேர் வைத்திருக்கிறார்கள். பேரை கேட்டதுமே படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என கதை கட்ட ஆரம்பித்து விட்டது ரசிகர் கூட்டம்....
இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- புகழ்ந்து தள்ளிய டிரம்ப்! அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் முறையாக 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அகமதாபாத் வந்த டிரம்ப்பை பிரதமர் மோடி வரவேற்றார். விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் சென்றார் டிரம்ப். பின்னர் தனது முதல் நிகழ்ச்சியாக அகமதாபாத் மொடேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பேசினார். பேச்சைத் தொடங்கும் போது. ‘நமஸ்தே’ எனக் கூறி தனது உரையைத் தொடங்கினர் டிரம்ப். தொடர்ந்து அவர் பேசியதாவது:- எனது உண்மையான நண்பர் மோடி. எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த நண்பர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்தியாவுக்காக பிரதமர் மோடி இரவு பகலாக உழைக்கிறார். இணையதள சேவை மற்றும் சமையல் எரிவாயு சேவையை இந்தியா முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார் மோடி.  கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியும...
கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அதிரடி சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவி...
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களின் கதையா தனுஷ் நடிக்கும் “கர்ணன்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கர்ணன் 90 சதவீத ஷூட்டிங் ஓவராம் - தனுஷ் தகவல்! பரியேறும் பெருமாள் மெகா ஹிட்டுக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இது தனுஷுக்கு 41வது படம். வருகிறார். இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட்டு உள்ளார்கள். பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணு பெரும் எதிர்பார்ப்போடு தயாரித்து வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜினா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில், கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் 90 சதவீத கா...
முதல் முறையாக இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

முதல் முறையாக இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அகமதாபாத் விமானநிலையத்தில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி. விமான நிலையத்தில் அதிபர் டிரம்பிற்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வர‌வேற்பு-இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்-அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணம் இதுவாகும்.   அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சபர்மதி ஆசிர‌ம‌ம் செல்லும் வழியில் அதிபர் டிரம்பிற்கு இந்திய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு....