கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!
தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்பினருடன் தொடர்பில் இருக்கும் நபர்களின் வீடுகளில் இன்று காலை 6.30 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 3 மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 23 இடங்களில் நடத்தினர்.
கோவை மாவட்டத்தில் புலியகுளம், சுங்கம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரின் வீடுகளில் நடந்தது.
கோவை புலியகுளம் ஏரிமேட்டை சேர்ந்தவர் தினேஷ் (வயது 36). பல் டாக்டர். இவர் இடையர்பாளையத்தில் ஆஸ்பத்திரி வைத்து நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி கேரள மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் டாக்டர் தினேஷ் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த மாவோயிஸ்ட் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றி...
இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பலி எண்ணிக்கை 181 ஆக சரிவு!
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 14 ஆயிரமாக குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறி உள்ளது.
கடந்த மார்ச் 1-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 12,286 ஆக இருந்தது. மறுநாள் 15 ஆயிரத்தை நெருங்கியது. இதன் மூலம் கடந்த 224 நாட்களில் இல்லாத அளவில் ஒரு நாள் பாதிப்பு நேற்று குறைந்திருப்பது புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,996 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி நிலவரப்படி தினசரி பாதிப்பு 5,692 ஆக இருந்தது.
அதன்பிறகு சுமார் 6 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று குறைந்துள்ளது. இதே போல மகாராஷ்டிராவில் கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவாக பாதிப்பு நேற்று 1,736 ஆக குறைந்துள்ளது.
இந்த இரு ...
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை!
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
கதை திருட்டு விஷயம் தெரிந்ததும் நஷ்ட ஈடு வழங்கிய சூர்யா!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா, படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் உருவான படம் தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’. கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கி இருந்தார். சமீபத்தில் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது.
கடந்த 2016-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ படத்தின் கதையை தழுவி தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இந்த விஷயம் சூர்யா கவனத்திற்கு சென்றதும், அவர் இயக்குனரை அழைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்மந்தப்பட்ட மராத்தி படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்த...
ரெட் கார்டா?.... கொரோனாவா? - பிக்பாஸில் இருந்து நமீதா வெளியேறியதன் பின்னணி இதுதான்!
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் ஒருவர். தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை.
கடந்த வாரம் நடந்த டாஸ்கில் நமீதா மாரிமுத்து, தான் கடந்து வந்த கஷ்டங்கள் குறித்து பேசியது காண்போரை கண்கலங்க வைத்தது. இவ்வாறு முதல் வாரமே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நமீதா, இறுதி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறினார். அவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
அவர் பிக்பாஸ் வீட்டில் த...
சிம்புவுடன் டூயட் பாடிய சிவாங்கி!
பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து படங்களில் நடிக்க தொடங்கிய அவர், சிவகார்த்திகேயனின் டான், சிவா உடன் காசேதான் கடவுளடா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர பல்வேறு படங்களில் பாடல்களும் பாடி வருகிறார்.
அந்த வகையில், தற்போது ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயன்’ என்கிற படத்துக்காக நடிகர் சிம்புவுடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை பாடி உள்ளார் சிவாங்கி. ‘மச்சி’ என தொடங்கும் அப்பாடலின் புரோமோ சமீபத்தில் வெளியாகி வைரலானது. விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
‘மாயன்’ திரைப்படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு...
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் அசத்தல் அப்டேட்டை வெளியிட்ட திரிஷா!
கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தற்போது அவர் டப்பிங் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலை...
வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் கவுதம் மேனனுக்கு இப்படி ஒரு வேடமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்றழைக்கப்படும் கவுதம் மேனன், வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விற...