யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !!
யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !!
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' ( Toxic: A Fairy Tale for Grownups ) திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.
...









