சிவாஜி பேரனை வீட்டுக்கு அழைத்து வாழ்த்திய ரஜினி!
சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரிக்க அனைவரும் எதிர்பார்க்கும் புதிய படைப்பாக “லெனின் பாண்டியன்” (Lenin Pandiyan) தற்போது உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், இப்படத்தின் நாயகனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான நடிகர் தர்ஷன் கணேசன் நடிக்கும் “லெனின் பாண்டியன்” திரைப்படத்துக்கு தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் டி. ஜி. தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், மேலும் ராம் குமார் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
“லெனின் பாண்டியன்” திரைப்படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதி...









