கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்
கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம்
விளையாட்டு, காதல், குடும்பம், சமூகம் பற்றி பேசும் 'புரொடக்ஷன் நம்பர் 8' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்
கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கண்ணன் ரவி தனது கே ஆர் ஜி மூவிஸ் நிறுவனத்தின் ஏழாவது படைப்பை போஸ் வெங்கட் இயக்கத்தில் தயாரிக்கிறார்.
'கன்னி மாடம்', 'சார்' ஆகிய பாராட்டுகளை குவித்த வெற்றி படங்களை தொடர்ந்து போஸ் வெங்கட் இயக்கும் இப்படம் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் வி. மதியழகன் இணை தயாரிப்பில் உருவாகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த 'புரொடக்ஷன் நம்பர் 8' படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னணி நடிகர் நடிகைகளும், முதன்மையான தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக இணைந்துள்ளனர்.
...