அப்துல் கலாமை அனைவரும் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று (சனிக்கிழமை) தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேசுவரம் அருகே உள்ள மண்டபம் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
அதைத் தொடர்ந்து பேய்க்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு சென்று அவர் மரியாதை செலுத்தினார். பின்னர், மதுரைக்கு காரில் சென்ற அவர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை...









