குஜராத் தேர்தல் முடிவு… தம்பட்டம் அடித்த பா.ஜனதாவிற்கு மக்கள் அடித்த எச்சரிக்கை மணி – சிவசேனா விமர்சனம்
குஜராத்தில் பா.ஜனதா 99 தொகுதிகளை வென்று தொடர்ந்து 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு கடும் சவால் அளித்த காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) ஒரு தொகுதியில் வென்றது.
பாரதீய பழங்குடியினர் கட்சிக்கு 2 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். பாரதீய ஜனதா 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என நிர்ணயம் செய்து பணியாற்றியது, ஆனால் 100 தொகுதிகளை கூட எட்டமுடியவில்லை. இவ்விவகாரம் தொடர்பாக பிற எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. மம்தா பானர்ஜி “இப்போதைய நேரத்தில் ஒரு சமமான தீர்ப்பை வழங்கிய குஜராத் மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். இது தற்காலிகமான மற்றும் அவமானப்படாத வெற்றியாகும், இருப்பினும் பாரதீய ஜனதாவிற்கு இது தார்மீக ரீதியிலான தோல்விதான். பொதுமக்களுக்கு நேரிட்ட அட்டூழியங்கள், அதீத கவலை மற்றும...









