ஞாயிற்றுக்கிழமை, மே 24
Shadow

HOME SLIDER

கருணாநிதி  என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு  – வைகோ

கருணாநிதி என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு – வைகோ

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கருணாநிதி என்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு - வைகோ கருணாநிதியை கோபலபுரத்தில் சென்று சந்தித்த வைகோ உணர்ச்சிகரமான சந்திப்பு என்று கூறினார். தன்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு என்றார். திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரோடு தனியாக ஆலோசனை நடத்திய வைகோ அவரது காரிலேயே அவருடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார். இரவு 8 மணி அளவில் கருணாநிதியை வைகோ சென்று பார்த்தார். அப்போது, யார் என்று தெரிகிறதா? என்று ஸ்டாலின் கருணாநிதியிடம் கேட்டவுடன், புன்னகை பூத்தவாறு வைகோ என கருணாநிதி உணர்த்தினார். சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம், “அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் கருணாநிதி அவர்களைப் ...
பிச்சை எடுக்கவா மலேசியா கலைவிழா… நடிகர் சங்க  டிரஸ்ட் பதவியை ராஜினாமா செய்து எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம்

பிச்சை எடுக்கவா மலேசியா கலைவிழா… நடிகர் சங்க டிரஸ்ட் பதவியை ராஜினாமா செய்து எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதற்காக நிதி திரட்ட மலேசியாவில் விழா நடத்தியது நடிகர் சங்கம். இந்த விழா இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நடிகர் சங்க தலைவர் நாசருக்கு நடிகர் எஸ்.வி.சேகர் காட்டமான கடிதம் எழுதி இருக்கிறார்.   திரு. நாஸர் தலைவர் ​ மற்றும் நிர்வாகிகள் ​ தென்னிந்திய நடிகர் சங்கம். வணக்கம். நம் சங்க தேர்தல் முடிந்தபின் என்னை நடிகர் சங்க டிரஸ்டிக்களில் ஒருவனாக நியமித்து என்னுடைய அறிவுரை,ஆலோசனைகள்,வழி நடத்துதல் தேவை என கேட்டுக்கொண்டீர்கள். ஆனால் ஒரு வருடத்தில் பல மாற்றங்கள். கையெழுத்திடுவதற்கு மட்டும் டிரஸ்டி என்ற நிலை வந்த போது நான் பல மெயில்கள் அனுப்பியதற்கு எந்த பதிலும் அளிக்காமல் எனக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள். என் பதில் கடிதத்தில் கேட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நம் நடிகர் சங்கம் 5 கிரவுண்டு அளவி...
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ..!

ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் 'மஹாவீர் கர்ணா' ..! விக்ரம் நடிப்பில் `ஸ்கெட்ச்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் `சாமி ஸ்கொயர்' படத்திலும், கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு விக்ரம் அடுத்ததாக `தூங்காவனம்' இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், விக்ரம் அடுத்ததாக ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு `மஹாவீர் கர்ணா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை நியூயார்க்கை சேர்ந்த யுனிடெட் பிலிம் கிங்டம...
ஊழல் தண்டனையால் ஜெயிலில் தோட்டக்காரர் ஆன லாலு… தினமும் 93 ரூபாய் ஊதியம்

ஊழல் தண்டனையால் ஜெயிலில் தோட்டக்காரர் ஆன லாலு… தினமும் 93 ரூபாய் ஊதியம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஊழல் தண்டனையால் ஜெயிலில் தோட்டக்காரர் ஆன லாலு..! தினமும் 93 ரூபாய் ஊதியம் பீகார் முன்னாள் முதல்- மந்திரியும், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக 6 வழக்குகளில் சிக்கினார். முதல் வழக்கில் 2013-ல் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதில் லாலுபிரசாத் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை பெற்றதால் எம்.பி. பதவியை இழந்தார். அதோடு தேர்தலில் போட்டியிடும் தகுதியையும் பறி கொடுத்தார். சுமார் ஓராண்டு ஜெயிலில் இருந்த அவர் பிறகு ஜாமீன் பெற்று விடுதலையானார். இந்த நிலையில் கால்நடை தீவன ஊழலில் இரண்டாவது வழக்கிலும் லாலுவுக்கு ரூ.3.5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து ராஞ்சி கோர்ட்டில் ‘அப்பீல்’ செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த நிலையில...
சட்டசபை வளாகத்தில் ஸ்டாலினுடன் கை குலுக்கிய டிடிவி தினகரன்..!

சட்டசபை வளாகத்தில் ஸ்டாலினுடன் கை குலுக்கிய டிடிவி தினகரன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சட்டசபை வளாகத்தில் ஸ்டாலினுடன் கை குலுக்கிய டிடிவி தினகரன்..! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றினர். ஆளுநர் உரையை புறக்கணித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் சென்ற டி.டி.வி தினகரன் ஆளுநர் உரை முடியும் வரை உள்ளே இருந்தார். ஆளுநர் உரை முடிந்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ என்று கூறினார். எதிர்க்கட்சி என்றாலும் தி.மு.க உடன் வெளிநடப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இதனையடுத்து, அவை வளாகத்தில் மு.க ஸ்டாலின் மற்றும் தினகரன் சந்தித்து கொண்டனர். முன்னதாக சட்டசபைக்கு வந்த தினகரனுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் கை கொடுத...
மஸ்கோத் அல்வா போல் அமைந்த ஆளுநர் உரை  –  மு.க.ஸ்டாலின் விமர்சனம்

மஸ்கோத் அல்வா போல் அமைந்த ஆளுநர் உரை – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில் அரசின் திட்டங்கள் மற்றும் திட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்த பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த உரை குறித்து தி.மு.க. செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போல் அமைந்துள்ளது. ஆளுநர் உரையில் தமிழக அரசின் கடன் சுமை குறித்து எதுவும் இல்லை. அரசுக்கு வருவாய் குறைந்துள்ளதை ஆளுநர் ஒப்புக்கொண்டுள்ளார். வருவாய் இல்லாத போது, திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த முடியும்? விவசாயிகளின் கோரிக்கை, வேலைவாய்ப்பின்மை குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. ஜி.எஸ்.டி.யை பாராட்டியதன் மூலம் ஆளுநர் உரை மத்திய அரசால் தயாரிக்கப்பட்டதா என சந்தேகம் உள்ளது....
மதுரையில் முதல் மாநாடு – ரஜினி கட்சியின் பெயர், கொடி குறித்து ராகவா லாரன்ஸ் தகவல்

மதுரையில் முதல் மாநாடு – ரஜினி கட்சியின் பெயர், கொடி குறித்து ராகவா லாரன்ஸ் தகவல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
ரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்ததை தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மதுரையில் தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ரஜினிகாந்தின் 68-வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா அழகர் கோவிலில்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் கலந்து கொண்டு பேசினர். மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் எந்திரம், வேட்டி - சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3...
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 12-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 12-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 12-ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக், கரும்பு விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவரது உரையில், பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்குவதற்கான மானிய உச்சவரம்பு உயர்வு, கச்சத்தீவு மீட்பு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஆளுநர் உரை முடிந்ததும் இன்றைய கூட்டம் முடிந்தது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது, ஆளுநர் உரை மீது முதலமைச்சர் நன்றி தெரிவித்து பேசும் தினத்தில், எதிர்க்கட்சி தலைவர...
பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு  உயர்வு : ஆளுநர் உரையில் அறிவிப்பு

பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு உயர்வு : ஆளுநர் உரையில் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார்.  அவரது உரையில் உள்ள அம்சங்கள் வருமாறு:- தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கனவு நனவாக முயற்சி எடுக்கப்படும். கூட்டமைப்பு நிறுவனங்கள் தொடங்க 100 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் மீதமுள்ள வழித்தடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்.  சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணிகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை 16 மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படும். நிலைத்த வளர்ச்சி இலக்குகளை 2030ஆம் ஆண்...