ரிலீஸ் சிக்கல்...ஜனநாயக(னி)ன் நாளை(ய) தீர்ப்பு..!
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் விவகார வழக்கில் நாளை (ஜனவரி 9 ஆம் தேதி) சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா தீர்ப்பு வழங்க இருக்கிறார்.
நடிகர் விஜய்யின் 69 ஆவது மற்றும் கடைசிப் படமான ஜனநாயகன் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு அனிரூத் இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததால், படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது. தீர்ப்பை நீதிபதி பி.டி. ஆஷா வழங்க இருக்கிறார்.
நேற்றிரவு ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள ச...
“வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி!
வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதல...
2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார்.இப்போது, திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக திரெளபதி 2 படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார்.
ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், சிராக் ஜானி, தினேஷ் லம்பா, சரவண சுப்பையா, பரணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
நேதாஜி புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி.எம் பிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் சோலா சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளது. இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இயக்குநர் மோகன்.ஜி பேசியதாவது:
திரெளபதி படத்தின் தொடர்ச்சிதான் திரெளபதி 2. முதல்பாகத்தின் நாயகன் ...
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜாக்கி' திரைப்படத்தின் டீசர் வெளியீடு
யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி', மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது
மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ் பந்தயத்தை மையமாக வைத்து இந்தியாவில் முதல் முறையாக உருவான 'மட்டி' திரைப்படத்தை வெற்றிகரமாக இயக்கி பாராட்டுகளைப் பெற்ற டாக்டர் பிரகபல் இயக்கத்தில் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் 'ஜாக்கி'.
பிகே7 ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் 'ஜாக்கி', மதுரையை களமாகக் கொண்டு நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டு மண் மணத்துடனும் மண்ணின் மைந்தர்களின் குணத்துடனும் உருவாகியுள்ளது.
'ஜாக்கி' திரைப்படத்தில் இயக்குநர் டாக்டர் பி...
‘திரௌபதி 2’ படத்தில் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது... அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி!
‘திரௌபதி 2’ திரைப்படத்தில் நடிகர் சிராக் ஜானி வில்லனாக நடித்திருப்பது படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது!
ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘திரௌபதி 2’ படத்தின் அடுத்த அப்டேட்டாக படத்தின் மூன்று வில்லன்களை அறிமுகப்படுத்துகிறது. அதில் முதன்மை வில்லனாக நடிகர் சிராக் ஜானி நடித்துள்ளார்.
இயக்குநர் மோகன் ஜியின் வரலாற்று ஆக்ஷன் கதையான ’திரௌபதி 2’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 14 ஆம் நூற்றாண்டின் தென்னிந்தியாவில் வேரூன்றிய காலகட்டக் கதையை பல மொழிகளில் திரையில் பிரம்மாண்டமாக கொண்டுவரவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து சமீபத்தில் மத்திய திரைப்படச் சா...