200 – 300 பேருடன் கோர்ட்டுக்கு வந்தால் பயந்து விடுவோமா என MLA ஜெகன் மூர்த்தியை காட்டமாக கேள்வி கேட்ட நீதிபதி!
கட்டப் பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்து சட்டப் பேரவைக்கு அனுப்பி வைத்தார்கள். 200 - 300 பேருடன் கோர்ட்டுக்கு வந்தால் பயந்து விடுவோமா என mla ஜெகன் மூர்த்தியிடம் காட்டமாக கேள்வி கேட்ட நீதிபதி.
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சித் தலைவரும் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன...









