சனிக்கிழமை, மே 23
Shadow

HOME SLIDER

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
  குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில், புறப்பட்ட 2 நிமிடங்களில் அகமதாபாத் மெஹானி நகர் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தத...
மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவர் ஆதரவு!

மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவர் ஆதரவு!

helth tips, HOME SLIDER, NEWS, உடல் நலம், செய்திகள்
  மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் அப்போலோ மருத்துவமனையின் CSR பிரச்சாரத்திற்கு திருமதி. உபாசனா காமினேனி கொனிடேலா ஆதரவு அப்போலோ மருத்துவமனையின் CSR பிரிவின் துணைத் தலைவரான  உபாசனா காமினேனி கொனிடேலா மார்பக புற்று நோய் குறித்தான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் CSR பிரச்சாரத்திற்கு தனது ஆதரவை வழங்கி உள்ளார். நாடு முழுவதும் 23 நகரங்களில் இந்தப் பிரச்சாரம் நடத்தப்படும். இதில் அப்போலோ டெலி மெடிசின் நெட்வொர்க்கிங் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக செயல்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பொறுப்பேற்க ஊக்குவிப்பதும் தான் இந்த CSR பிரச்சாரத்தின் நோக்கமாகும். சுகாதார துறை சார்ந்த தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ள FUJIFILM இந்தியா, அப்போலோ மருத்துவமனை அறக்கட்டளையின் CSR பிரிவின் துணைத் தலைவர் திருமதி...
அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்' டி என் ஏ' ( DNA)  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ஜூன் மாதம் இருபதாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ' டி என் ஏ' ( DNA)  திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் ஆகியோர் பாடல்களுக்கும், ஜிப்ரான் வைபோதா படத்திற்கு பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். ஃபேமிலி என்டர்டெய்...
பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு

பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  *'காட் ஆஃப் மாஸஸ்' , 'பத்ம பூஷண்' டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு* *'காட் ஆஃப் மாஸஸ்' நந்தமுரி பாலகிருஷ்ணா - பிளாக் பஸ்டர் ஹிட் பட இயக்குநர் போயபதி ஸ்ரீனு - ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா - 14 ரீல்ஸ் பிளஸ் - எம் . தேஜஸ்வினி நந்தமுரி கூட்டணியில் தயாராகும் 'அகண்டா 2 : தாண்டவம் ' படத்தின் டீசர் 'பத்மபூஷண் ' பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக செப்டம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகிறது.* 'காட் ஆப் மாஸஸ் ' நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் 'அகண்டா 2 : தாண்டவம்'. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற 'அகண்டா' திரைப்படத்தின் தொடர்...
ப்ரோகோட்’ (BroCode) படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன்

ப்ரோகோட்’ (BroCode) படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் 'ப்ரோகோட்- (BroCode)'* *'ப்ரோகோட்' ( BroCode)படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கும் ரவி மோகன்* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ரோகோட்- ( BroCode)' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ' ப்ரோகோட்- (BroCode)' எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். 'போர் தொழில்' படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்...
திருக்குறள் ” மனித குலத்துக்கே பொதுவான நூல் ” திருக்குறள் ” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !!

திருக்குறள் ” மனித குலத்துக்கே பொதுவான நூல் ” திருக்குறள் ” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    " திருக்குறள் " மனித குலத்துக்கே பொதுவான நூல் " திருக்குறள் " படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் !! திருக்குறள் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !! பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இம்மாதம் 27 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருக்குறள் படத்தின் இயக்குனர் A.J பாலகி...
சன் பிக்சர்ஸ் – அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!

சன் பிக்சர்ஸ் – அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *"சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்* *சன் பிக்சர்ஸ் - அல்லு அர்ஜுன் -அட்லீயின் #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன்* சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி... இருநூறு கோடி... ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம் இந்திய சினிமாவில் தன் பிரத...
மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதி!

மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  *மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினார்!* தனது தனித்துவமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்ற இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் எதிர்பாராத மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் சுகுமாறனின் இந்த திடீர் மறைவு திரையுலகினருக்கு மட்டுமல்ல அவரது குடும்பத்தினருக்குமே ஈடுசெய்ய முடியாத இழப்பு. இந்த நேரத்தில் மறைந்த இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக அவரது கடைசிப் படமான ’இராவண கோட்ட’த்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி ரூ. 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். நடிகர் சாந்தனு பாக்யராஜ், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, FEFSI தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்ரோர் முன்னிலையில் விக்ரம் சுகுமாரனின் தாயாரிடம், தயாரிப்பாளர் கண்ணன் ரவி மகன் தீபக் ரவி காசோலையை வழங்கினார். ...
தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5

தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
    தக்லைப் கோடங்கி விமர்சனம் 3.5/5   கமலின் தக் லைப் நாயகனின் வழி வந்த கதையா? அல்லது மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்தவானம் கதையைப்போல ஒரு கதையா? வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்டு கதையை தேடுகின்ற மேக்கிங் ஆப் மணி சாரின் ஒரு படைப்பா? இப்படி ஏராளமான கேள்விகளோடு இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் தக் லைப் யாருக்கெல்லாம் லைப் கொடுக்கப்போகிறது…   கதைப்படி…. எதுக்கு கதையெல்லாம் விடுங்க கழுத கதையா முக்கியம்… படம் எப்படி இருக்கு அதை சொல்லுங்கன்னு நீங்க யோசிக்கிறது தெரியுது…   வழக்கமான மணிரத்னம் படம்தான்னு நம்பிக்கை முதல்லயே வந்துடுது… எப்படின்னா நாசர் மகள் கல்யாணத்துக்கு முன்னாடியே காதலனை நம்பி கர்ப்பம் ஆகிடுறா… அங்க ஆரம்பிக்கிது படம்… அப்பறம் அவ செத்து… அதுக்கு காரணமானவன கொன்னு கமல் ஜெயிலுக்கு போய் திரும்பி வர்றதுக்குள்ள வளர்த்தவங்ளே கமலுக்கு எதிரா...
பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர்  வெளியாகும் தேதி அறிவிப்பு!

பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *பிரபாஸின் 'தி ராஜா சாப்' 2025 டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது* *பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் ஜூன் 16ஆம் தேதியன்று வெளியாகிறது* கடந்த பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சலசலப்பு மற்றும் ஊகங்களுக்கு 'தி ராஜா சாப்' படத்தின் தயாரிப்பாளர்கள் உற்சாகத்துடன் பதிலளித்திருக்கிறார்கள். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என்றும், ஜூன் 16ஆம் தேதியன்று இப்படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இது ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தையும் , சிலிர்ப்பூட்டும் அனுபவத்தையும் வழங்கும் என படக்குழு உறுதியளிக்கிறது. இதனால் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு நிறைவடைந்திருக்கிறது. 'இதுவரை அறியப்படாத பிரதேசத்தில் அடியெடுத்து வைக்கும் பிரபாஸ்' - என 'தி ராஜா சாப்' படத...