ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் என இருவரும் இணைந்து நடனமாடியுள்ள பாடல் “ஜனாபே ஆலி” சிறிய க்ளிம்ஸ் வீடியோ ரிலீசாகிறது!
ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் என இருவரும் இணைந்து நடனமாடியுள்ள பாடல் “ஜனாபே ஆலி”, ரசிகர்கள் பெரிய திரையில் தான் கொண்டாட முடியும். இந்த பாடலின் சிறிய க்ளிம்ஸ் வீடியோ நாளை காலை வெளியாகிறது என யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்!
இந்திய சினிமாவில் தற்போது எதிர்பார்ப்பு மிகுந்த ஆக்ஷன் திரைப்படமாக வார் 2 உருவாகியுள்ளது. இந்திய சினிமாவில் உள்ள இரண்டு மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் நடிகர்களான ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆர் என இருவரிடையே உள்ள நடன போட்டியை பெரிய திரையில் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என இன்று யஷ் ராஜ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த பாடலுக்கு 'ஜனாபே ஆலி' என பெயரிட்டுள்ளனர் . இது இந்திய சினிமாவில் இதுவரை யாரும் காணாத அளவிற்கு பிரமாண்டமான, புத்துணர்ச்சியான நடனக் காட்சியாக உருவாகியுள்ளது.
யஷ் ராஜ் நிறுவனம் ஜனாபே ஆலி பாடலின் சிறு க்ளிம்...









