சட்டத்தை சாதகமாக்கி கல்லா கட்டும் உதயம் தியேட்டர்… கண்டு கொள்ளாத காவல்துறை..!
உதயம் தியேட்டரின் இன்றைய நிர்வாகிகளின் உள்ளடி வேலை!
சினிமாவில் ஏற்கெனவே எக்கச்சக்கமான பிரச்னைகள் இருக்கிறது.அத்தனையையும் தாண்டிதான் வாரா வார்ம் சில பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அப்படி கோடி கணக்கில் உருவான பல படங்கள் வெளியாகி ரிலீஸான அடுத்த நாளே இணையத்தில் லீக்-காகி வருமானத்தை கெடுத்து விடுகிறது. அத்துடன் பெரும்பாலான தியேட்டர்கள் அன்றாடம் வசூலாகும் தொகையை உண்மையான கணக்குடன் தயாரிப்பாளர்களிடம் சேர்க்கும் போகும் குறைந்து வருகிறது. இது குறித்து நம்மிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு சீனியர் புரொடியூசர், “இப்போ பார்த்தீங்கண்ணா டாப் ஹீரோக்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறி வாராங்க.. அதை கவனிச்சீங்களா?அதுக்குக் காரணம் இங்கே தயாரிப்பாளர்கள் குறைந்துகொண்டே போவதுதான். இதே தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்த ஏ.வி.எம்., சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது படத் தயாரிப்புகளை வெகுவா...









