ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் 'ட்யூட்'- இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
‘லவ் டுடே’ மற்றும் ‘ட்ராகன்’ என இரண்டு பெரிய வெற்றி படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் பரபரப்பான நாயகனாக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதனின் மூன்றாவது திரைப்படமாக ‘ட்யூட்’ வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இணைந்து சுமார் 7 வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்த பின் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கீர்த்தீஸ்வரன். 27 வயதில் தன்னுடைய முதல் படத்தை இயக்கியிருக்கும் கீர்த்தீஸ்வரன், ’ட்யூட்’ பட அனுபவம் குறித்து கூறுகையில், “என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் 'ட்யூட்' படத்தின் கதை...









