வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

விரைவில் திருப்பதி லட்டு விலை உயர்கிறது!!

விரைவில் திருப்பதி லட்டு விலை உயர்கிறது!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருப்பதியில் லட்டுவின் விலையை உயர்த்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதி கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழக்கப்பட்டு வருகிறது. இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு ரூ.10க்கு 2 லட்டுகளும், மலைபாதையில் வரும் பக்தர்களுக்கு ரூ. 10க்கு 2 லட்டுகளும், கூடுதலாக ரூ.25க்கு 1 லட்டு என வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.50, ரூ.300 ஆகிய கட்டணங்களில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு 2 மற்றும் 3 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரு லட்டை தயார் செய்ய தேவஸ்தானம் ரூ.37 செலவு செய்கிறது. மேலும் ஆண்டுக்கு ரூ.200 கோடி கூடுதல் செலவாகிறது எனவும் தேவஸ்தானம் கூறியுள்ளது. இந்நிலையில் இதை கட்டுபடுத்த லட்டு விலையை உயர்த்...
கமல் எங்களுடன் கைகோர்த்தால் வரவேற்போம்: தமிழிசை

கமல் எங்களுடன் கைகோர்த்தால் வரவேற்போம்: தமிழிசை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு கமல் மட்டும் அல்ல, யார் தங்களுடன் கைகோர்த்தாலும் பா.ஜ.க. வரவேற்கும்.
வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி

வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  வேலைக்காரன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், சினிகோ உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் படத்தை வரும் டிசம்பர் மாதம் 22ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி நடைபெறும் என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு பாடல்கள் ஆன்லைனில் வெளியாகி ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது மெடிக்கல் மாபியாவை மையமாகக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் சரி, படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அறம் சூப்பர் ஹிட் படத்தை அடுத்து நயன்தாராவின் வேலைக்காரன் ரிலீஸாக உள்ளது....
முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் ரஜினி

முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் ரஜினி

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் 'தளபதி' படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ரஜினி நடித்த படங்களில் சிறந்த படமாகக் குறிப்பிடப்படுவது 'தளபதி' படம். 'தளபதி' படத்தின் மூலமே இயக்குநர் மணிரத்னமும் அதிகமாகப் பேசப்பட்டார். நட்பை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களுகு இப்போதும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவது இந்தப் படம் தான். இந்தப் படத்தில் இணைந்து நடித்த ரஜினியும், மம்முட்டியும் 'சூர்யா தேவா' ஆகவே ரசிகர்கள் மனதில் பதிந்திருப்பதே இப்படத்தின் வெற்றி. இந்தக் கூட்டணி இப்போது மீண்டும் இணைகிறது   1991-ல் மணிரத்னம் இயக்கிய படம் 'தளபதி'. ரஜினி - மம்மூட்டி இருவரும் முதன்முறையாக இந்தப் படத்தில் இணைந்து நடித்தனர். இளையராஜா அந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் தமிழின் கிளாசிக் படங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது அந்தச் சமயத்தில் சூப்பர் ஹிட்டான 'தளபதி' படத்திற்கு பிறகு ரஜின...
தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்

தென் ஆப்பிரிக்க அழகி 2017 மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமீபத்தில் 2017 மிஸ் உலக அழகியா இந்தியாவின் அரியானவை சேர்ந்த மனுஷி சில்லர் தேர்ந்து எடுக்கபட்டார். உலகின் இரண்டாவது போட்டியான்   66 வது மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டி  அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் மொத்தம் 92 நாட்டு அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியாவை சேர்ந்த மிஸ் திவா சாந்தா சசிதர், இந்தியா சார்பில் கலந்து கொண்டார். இவர் இறுதி போட்டிக்கு தேர்வான முதல்15 அழகிகள் பட்டியலில் கூட இடம்பெற முடியவில்லை. மிஸ் யூனிவர்சாக தேர்ந்து எடுகப்பட்ட டெமிக்கு பிரான்சின் ஐரிஸ் மிடேனெரெரால்,  கிரீடம் சூட்டினார். அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் ஹார்வி மற்றும் சூப்பர் மாடல் ஆஷ்லே கிரஹாம் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து  வழங்கினர். இந்த போட்டியில் ஜமைக்கா, வெனிசுலா, தாய்லாந்து, மற்றூம் கொலம்பியா ஆகிய நாடு அழகிகள் முதல் 5 இடத்திற்கு வந்தனர்.  ஜமைக்கன் அழகு டேவினா பென்னட் இரண்டாவது ரன்னர்...
கோடி கொடுத்தாலும் அந்த காமெடி நடிகருடன் நடிக்க முடியாது என கைவிரித்த நடிகை..!

கோடி கொடுத்தாலும் அந்த காமெடி நடிகருடன் நடிக்க முடியாது என கைவிரித்த நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  கோடி ரூவா கொடுத்தாலும் அவருடன் நடிக்க முடியாது – ஓவிய நடிகை தடாலடி பெரிய பாஸ் மூலம் திடீர் புகழ் அடைந்தவர் அந்த ஓவிய நடிகை. பெரிய பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அரசியலில் இருக்கும் கருணையான காமெடி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அட்வான்சும் வாங்கியிருந்தாராம். இப்போது திடீர் புகழ் காரணமாக அந்த காமெடி நடிகருடன் நடிக்க முடியாது என்று கைவிரித்து விட்டாராம்.நீங்க கோடி ரூபா கொடுத்தாலும் இனி அவருடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லிட்டாங்களாம் .விஷயம் படம் தயாரிக்கிறவங்க சங்கத்துக்கு போச்சுது. அவுங்க நடிகைகிட்ட விளக்கம் கேட்டாங்க. சொன்ன தேதியில அவுங்க படம் ஆரம்பிக்கலன்னு பதில் சொல்லி வாங்கி அட்வான்சை வட்டியோடு திருப்பிக் கொடுத்திட்டாராம் நடிகை. ஆனால் வேற ஏதோ காரணம் இருக்கிறது என்று கிசு கிசுக்க படுகிறது இதனால் காமெடி நடிகர் கடுப்புல இருக்காராம்.  ...
“அன்பு செழியனை தண்டிக்க வேண்டும்” நடிகை பூர்ணா

“அன்பு செழியனை தண்டிக்க வேண்டும்” நடிகை பூர்ணா

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் கடன் தொல்லையால் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பைனான்சியர் அன்பு செழியன் வட்டிக்கு மேல் வட்டி கேட்டு மிரட்டியதாக அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பு செழியனை தேடி வருகிறார்கள். இந்த நிலையில், அன்பு செழியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும், நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். நடிகை பூர்ணா டுவிட்டரில் அன்பு செழியனை கண்டித்து கருத்து பதிவிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:- “அசோக்குமார் சிறந்தவர்களில் எப்போதும் சிறந்தவராக இருக்கிறார். நல்ல மனம் படைத்தவர். நீங்கள் எங்களை விட்டு போக முடியாது. எப்போதும் எங்களுடனேயே இருக்கிறீர்கள். அன்பு செழியன் போன்றவர்கள் சினிமாவில் இருக்கக்கூடாது. இந்த உலகத்தை விட்டு அசோக்குமார் சென்...
வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும்  மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்

வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் இருவரையும் மலை உச்சியில் 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்த மணிரத்னம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ஏ.ஆர்.ரகுமான்-வைரமுத்து கூட்டணியுடன் மணிரத்னம் தனது புதிய பட வேலையை தொடங்கி இருக்கிறார். கோவா அருகில் உள்ள மலை உச்சியில் பாடல் ‘கம்போசிங்’ நடந்தது. ‘காற்று வெளியிடை’ படத்தையடுத்து மணிரத்னம், ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, சிம்பு, பகத்பாசில், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தனது படத்தில் பாட்டுக்கு தனிக்கவனம் செலுத்தும் மணிரத்னம், தனது வெற்றிக்கூட்டணியான கவிஞர் வைரமுத்து, ஏ.ஆர்.ரகுமான் ஆகிய இருவரையும் பாடல் ‘கம்போசிங்’குக்காக ஒரு மலை உச்சிக்கு அழைத்து சென்று 5 நாட்கள் ஆனந்த சிறை வைத்துவிட்டார். கோவாவில் இருந்து 4 மணி நேரம் சாலை வழியே பயணித்தால், மராட்டிய மாநிலத்தின் மலைக்குன்றில் சென்று முடிகிறது. அதுதான் இந்தியாவின் மேற்கு எல்லை. அந...
என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது – பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட்

என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது – பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட்

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள்
  பிரபல இந்திப் பட டைரக்டர் மகேஷ் பட், தனது வாரிசுகளான இரண்டு இளம் நடிகைகளை களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். மூத்தவரான ஆலியா பட் ஏற்கனவே முன்னணி இடத்தை பிடித்திருக்க, சகோதரி ஷஹீன் பட் திரை உலகில் முன்னுக்கு வர அதிவேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். பிசியாக இருக்கும் இவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் சந்திக்கவைத்தபோது குடும்பத்தை பற்றிய ருசிகரமான பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். ஆலியா பட்: நாங்கள் மூவரும் சேர்ந்து இருப்பது போன்ற போட்டோ உள்ளபடியே ரொம்ப அழகானது. நாங்கள் மூவரும் ஒரே துறையிலிருந்தாலும் இதுவரை நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டதில்லை. இந்த போட்டோ எங்களை இணைத்திருக்கிறது. மகேஷ் பட்: என் மகள்களால் எனக்கு பெருமை கிடைத்திருக்கிறது. தன்னைவிட தன் குழந்தைகள் புகழ் பெறவேண்டும் என்று தான் எல்லா அப்பாக்களும் விரும்புவார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். என் ஆசை நிறைவேறிவிட்...
கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

கேபிள் டி.வி உரிமையாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட உள்ளனர்- விஷால்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  நெல்லை மாவட்டம் அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விஷால் நடிக்கும் இரும்புத்திரை என்ற புதிய சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. அம்பை ஆற்றுச்சாலை, தாமிரபரணி ஆறு, அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிகர் விஷால் நடித்து வருகிறார். இதற்காக அம்பை தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதி, ராணுவ பயிற்சி மையம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. நேற்று ராணுவ மையத்தில் இருந்து விஷால் வெளியே நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்கிடையே அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம் தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் விஷால் கலந்துரையாடல் நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:– புதுப்படங்களின் ப...