பத்தா – கோடங்கி விமர்சனம் 3.5/5
பத்தா – கோடங்கி விமர்சனம்
“டான்… ஊரையே நடுங்க வைக்கிறான்!ஆனா ஒரு 8 வயசு பையன் முன்னாடி இந்த டான் படுற பாடு இருக்கே… அதுதான் பத்தா!”
விஜய் சேதுபதியை வைத்து இன்னொரு கேங்ஸ்டர் படம் எடுத்திருக்காங்கன்னு நினைச்சுட்டு தியேட்டருக்குப் போனால்… அங்கேதான் முதல் ட்விஸ்ட்!
இது வழக்கமான “டான் வந்தான்… அடிச்சான்… வெட்டினான்… பழி வாங்கினான்…” கதை கிடையாது.
1986-ம் ஆண்டு மெட்ராஸ்.
ஊரையே பயமுறுத்துகிற ஒரு உள்ளூர் தாதா — பத்தா!
அப்படிப்பட்ட பத்தா, ஒரு பள்ளி பாத்ரூமுக்குள் மாட்டிக்கிறார். அதுவும் யாரால்?
ஒரு 8 வயசு சிறுவனால்!
அங்கிருந்து ஆரம்பிக்கிறது ஒரு வித்தியாசமான ஆட்டம்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதிக்கு இந்த மாதிரி கதாபாத்திரம் புதுசு கிடையாது.
ஆனா இங்கே முக்கியமான விஷயம்—
தாதாவாக நடிக்கிறாரா?இல்லை… தாதாவுக்குள் இருக்கும் மனிதனை நடிக்கிறாரா?
இதுதான் படத்தின் சுவாரஸ்யம்...









