செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

HOME SLIDER

அர்ஜுன் தாஸின் “ஜான் டோ” கோடங்கி விமர்சனம் 3/5

அர்ஜுன் தாஸின் “ஜான் டோ” கோடங்கி விமர்சனம் 3/5

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
      ஒரு குழந்தை இறந்து கிடக்கிறது. அந்தக் குழந்தைக்கு அடையாளம் இல்லை. இன்னொரு குழந்தை காணாமல் போகிறது. இரண்டு சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? அந்த மர்மத்தைத் தேடி ஓடுகிறார் காவல்துறை அதிகாரி சந்துரு! குழந்தைகள் கடத்தல், அடையாளம் தெரியாத சடலம், தொடர் குற்றங்கள், குடும்ப உறவுகளுக்குள் புதைந்திருக்கும் உளவியல் பிரச்சினைகள் என ஒரு சைக்கோ கிரைம் த்ரில்லருக்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் மதுமிதா. ஆனால் கேள்வி ஒன்றுதான்… மர்மத்தை உருவாக்கிய அளவுக்கு அதற்கான பதிலையும் வலுவாகக் கொடுத்திருக்கிறாரா? கேரளா – தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள கடம்புழா காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பொறுப்பேற்கிறார் சந்துரு (அர்ஜுன் தாஸ்). அங்கு ஏரிக்குள் கார் மூழ்கி விபத்துக்குள்ளாகிறது. காரில் இருந்த சிறுவனைக் ...
ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஸ்டேஷன்!

ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஸ்டேஷன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஸ்டேஷன் ‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிப்பில், உருவாகும் இப்படம் காதல், குற்றம், அதிரடி என மூன்றும் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை கேப...
கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, songs, Trailer, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் 'மக்கள் காவலன்' திரைப்படத்தின் முதல் பாடலான 'இக்னோர் – IGNORE' வெளியீடு! பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படமான 'மக்கள் காவலன்' (Makkal Kaavalan) திரைப்படத்திலிருந்து 'இக்னோர் – IGNORE' எனும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'இக்னோர் – IGNORE' பாடலுக்கு 'தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை' (Godfather of Tamil Hip-Hop) என அழைக்கப்படும் மலேசிய ராப்பர் யோகி பி (Yogi B), நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் குரல் கொடுத...
தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்' (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவரும், ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு கதை, வசனம் எழுதியவரும், பத்து இயக்குநர்கள் இணைந்து நடித்த ‘மாயாண்டி குடும்பத்தார்’ திரைப்படத்தில் கவனம் ஈர்த்த கதாபாத்திரத்தில் நடித்தவருமான இயக்குநர் K.P. ஜெகனின் அடுத்த படைப்பு ‘ஜெயில் மேட்ஸ்’. தென்னிந்தியாவில் முதன்முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் K.P. ஜெகன், இயக்குநர் ஜெகனாகவே நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். மேலும், மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி  சங்கர்,...
இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, songs, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்! நடிகர் மித்துன் மாணிக்கம் நடிக்கும் ‘ஃபேமிலி பாய் - (Family Boy)’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு! தமிழ் சினிமாவில் நம்பிக்கை அளிக்கும் வகையில் வளர்ந்து வரும் திறமையான நடிகர் மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஃபேமிலி பாய் - Family Boy’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீராகணம்..’ எனும் முதல் பாடலும், அதற்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு ச...
நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அப்பா குட்டி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘அப்பா குட்டி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ‘அப்பா குட்டி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – நவம்பர் 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது! விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்..,கலை இயக்குநர் ராஜா பேசியதாவது.. , “இந்தப் படத்தைத் திட்டமிடும்போதே இயக்குநர் சார் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கேற்ப படத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். என்னுடைய பணியிலும் மூன்று, நான்கு விதமான மாற்றங்களைச் செய்திருக்கிறோம். குறிப்பாக, இரண்டு காலகட்டங்களில் காட்சிகளின் தோற்றம், வண்ணங்கள் மற்றும் அதற்கான அம...
‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்!

‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'மரகத நாணயம்2' திரைப்படத்தின் தீபாவளி ட்ரீட் பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் 'மரகத நாணயம்2' திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ‘மரகத நாணயம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் மூலம் ARK சரவன் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, வெளியீட்டிற்கு தயாராகி வரும் இதன் இரண்டாம் பாகத்தையும் இவரே எழுதி இயக்கியுள்ளார். சாபமிடப்பட்ட மரகதக் கல், குறும்புத்தனமான ஆவிகள், நகைச்சுவை கலந்த சாகசப் பயணம் என இந்தத் திரைப்படம் அனைத்து தரப்ப...
’RX’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

’RX’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  ’RX' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு! இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு RX எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோரால் தொடங்கப்பட்ட மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், இந்தியாவின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, தெலுங்குத் திரையுலகில் ஸ்ரீமந்துடு, ரங்கஸ்தலம், உபென்னா மற்றும் மாபெரும் வெற்றிபெற்ற புஷ்பா உள்ளிட்டப் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம், பிரம்மாண்டமான திரைப்பட உருவாக்க...
நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் நாகார்ஜுனாவின் 'கிங் 100 - King 100' திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் 'கர்ணா - Karna' கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! 'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது படைப்பாகவும் அமைந்துள்ளது. 'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' (Made in Korea) ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ர.கார்த்திக் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். இது அவரது மூன்றாவது திரைப்படமாகும். இப்படத்தில் திறமையான நட்சத்திரங்களின் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 'கிங் 100 - King 100' படக்குழுவினர், இப்படத்தில் 'கர்ணா' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அசோக் செல்வனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்....

டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  டோக்கியோ சர்வதேசத் திரைப்பட விழாவில்  ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியனின் ‘காகித மலர்’! தயாரிப்பாளர் பிரேமா செழியன், மகள் செல்வி அதிதா செழியன் பங்கேற்பு ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் அவர்கள் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்காக (World Premiere) தேர்வு செய்யப்பட்டு, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்த உலகத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளரான பிரேமா செழியன் மற்றும் சிங்கப்பூரில் கல்வி பயிலும் அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். திரையிடப்பட்ட இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் (Housefull)நிரம்பி வழிந்தன. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். படம் நிறைவடைந்ததும் அரங்கம் முழுவதும் பலத்த கைதட்டல்...