சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

இயக்குனர் செல்வமணியின் “இருக்கு ஆனா இல்ல” I ஏமாறும் திரையுலகம் I கதையான நிஜம்

இயக்குனர் செல்வமணியின் “இருக்கு ஆனா இல்ல” I ஏமாறும் திரையுலகம் I கதையான நிஜம்

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
    இயக்குனர் செல்வமணியின் பொட்டல் காட்டுச்சாதனை ! ? “இருக்கு ஆனா இல்ல” இந்த வீடியோ பதிவு யாரையும் குறை சொல்வதற்காக எடுக்கப்படவில்லை. ஆனால், பல ஆண்டுகளாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பெயரில் தொடர்ந்து மாய நம்பிக்கை பிம்பத்தை ஏற்படுத்தி வரும் செயலை சுட்டிக்காட்டவே எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒரே நிர்வாகம் பல ஆண்டுகளாக பதவியில் நீடித்தால் தவறுகள் கூட சரியாகத்தான் அவர்கள் கண்களுக்கு தெரியும். 25 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பெப்சி தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து அரசிடமும், நடிகர்களிடமும், தனியாரிடமும் பல கோடிகளை வசூலித்து பல ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படாமல் அரசு கொடுத்த போது எப்படி பொட்டல் காடாக இருக்கிறதோ இப்போதும் அதே பொட்டல் காடாக இருக்கும் நிலத்தில் மண் அடித்தோம், சமப்படுத்தினோம், மரங்களை வெட்டினோம் என பல கோடிகளை கணக்காக காண்...
உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பின்றி எல்லைகளுக்குச் செல்லவேண்டாம் – மத்திய அரசு!

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பின்றி எல்லைகளுக்குச் செல்லவேண்டாம் – மத்திய அரசு!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்,  உக்ரைனில் உள்ள இந்தியர்கள் எவ்வித முன் அறிவிப்பின்றி பிற நாட்டு எல்லைகளுக்குச் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதால் தங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. தேவையற்ற நடமாட்டத்தை தவிர்த்து வீடுகளுக்கு உள்ளேயே பத்திரமாக இருக்க வேண்டும். எல்லை சோதனை சாவடிகளைப் பற்றி தெரியாமல் வெளியேற வேண்டாம். எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் இந்திய தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது....
கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்!

கீவில் உள்ள ராணுவ தளத்தின் மீதான ரஷ்ய தாக்குதல் முறியடிப்பு – உக்ரைன் ராணுவம் தகவல்!

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் அரசும் தங்களை தற்காத்துக் கொள்ள ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கீவ் நகரில் உள்ள ராணுவ தளத்தைக் குறிவைத்து ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டது. கீவ்வில் இருந்து மேற்கே 8 மைல் தொலைவில் கடும் சண்டை நடந்து வருகிறது என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது....
உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

உக்ரைன் போர் – இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா?

HOME SLIDER, NEWS, அரசியல், உலக செய்திகள், செய்திகள்
2 நாடுகளுக்கு இடையே நடக்கிற போர் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டை பாதிக்குமா? தற்போதுள்ள உலகமய பொருளாதாரத்தில், நிச்சயமாக எல்லா நாடுகளுமே ஏதோ ஒருவகையில் பாதிக்கப்படும். அப்படியானால், உக்ரைன் போர் இந்தியாவுக்கு என்ன விதமான பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்?. உக்ரைன் போரின் விளைவாக நேரடி, மறைமுக, செயற்கை பாதிப்புகளை நாம் சந்திக்க வேண்டி வரும். எப்போதுமே பதற்றமான சூழல் உருவாகிறது என்றால், அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிலர் முனையத்தான் செய்வார்கள். இதன் காரணமாக செயற்கைப் பற்றாக்குறை அல்லது விலையேற்றம் ஏற்படும். குறிப்பாக, யூகத்தின் அடிப்படையில் நடைபெறும் வணிகத்தில் உடனடியாக இதன் பாதிப்புகளை அறிய முடியும். இதனால்தான், போர் அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தேசியப் பங்குச் சந்தையில் கடுமையான மாற்றம் இருந்தது. இதேபோன்று, அத்தியாவசியப் பொருட்களுக்கும் செயற்கையான...
உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்- ரஷியா!

உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்- ரஷியா!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் 2-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக...
தீவிர பயிற்சியில் அனுஷ்கா சர்மா.. வியக்கும் ரசிகர்கள்!

தீவிர பயிற்சியில் அனுஷ்கா சர்மா.. வியக்கும் ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி. இவர் இந்திய அணியை 2008-ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டுவரை வழி நடத்தினார். இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய இவருக்கு விளையாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு தயாராகும் விதமாக அனுஷ்கா சர்மா மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பந்துவீச்சு பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை அனுஷ்கா சர்மா இன்று பகிர்ந்துள்ளார்....
ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!

ரஜினி வெளியிட்ட தோனியின் சூப்பர் ஹீரோ புத்தகம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி, 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். எம்.எஸ். தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் கதாநாயகனாகவும் அறிமுகமாகவுள்ளார். விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து, ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை சமீபத்தில் தோனி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வ...
நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா – குவியும் லைக்குகள்!

நீச்சல் உடையில் கலக்கும் பூனம் பாஜ்வா – குவியும் லைக்குகள்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது....
முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள சட்டசபை!

முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள சட்டசபை!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள்
  மேற்குவங்காள சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிழை ஏற்பட்டதன்படியே பகல் 2 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2 மணிக்கு சட்டசபை கூட்டத்தை நடத்த கவர்னர் ஜக்தீப் தன்கார் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி மார்ச் 7-ந் தேதி நள்ளிரவில் சட்டசபை கூட்டம் ஆரம்பிக்க உள்ளது. சட்டசபை கூட்டம் தொடர்பாக கவர்னருக்கு மாநில அரசால் அனுப்பட்ட பரிந்துரை கடிதத்தில், சாதாரண தட்டச்சு பிழையாக பகல்பொழுதை குறிக்கும் ஆங்கில குறியீடான பி.எம். என்பதற்குப் பதிலாக, இரவு நேரத்தை குறிக்கும் ஏ.எம். என்ற குறியீடு, இடம் பெற்றுவிட்டது. இருந்தாலும் பிழை நேர்ந்ததன்படி அசாதரணமான நிலையில் நள்ளிரவில் சட்டசபையை கூட்டலாம் என்று சபாநாயகர் பிமன் பானர்ஜியும் கேட்டுக்கொண்டதால், மம்தா பானர்ஜி தலைமையில...